திவ்ய பிரபந்தம்

Home

PT 4.8 பிறையேறு சடையானும்

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும் * முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான் * வெறியார் தண் சோலைத் திருவேங்கடமலை மேல் * நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே

பெருமாள் திருமொழி 4.8

இளம் சந்திரனை ஜடையில் தரித்துள்ள சிவனும், பிரம்மாகவும் தேவேந்திரனும், தங்களுடைய யோக்யதைக்குத் தகுந்தபடி செய்தும் பெரிய யாகங்களுக்குப் பலனாக (அவர் அவர்களுடைய) விருப்பங்களை பூர்த்தி செய்பவனும் வேதத்தை பிரதிபலிக்கும் பொருளாகவும் இருப்பவனான எம்பெருமானுடைய பரிமளம் மிகுந்த குளிர்ந்த சோலைகளை உடைய திரு வேங்கடம் மலை மேல் (ஸ்ரீ வைஷ்ணவர்களின் பாதத்தூளி படும்படி) வழியாய்க் கிடக்கின்ற துணிவு உடையவனாகக் கடவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஆறு என்று ஆனால் ஒரு கால் பெருகினால் விநியோகப்பட்டு, வற்றினால் விநியோகப்பட முடியாமல் போகும் என்கிறார். அது மட்டும் இன்றி, எப்போதும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸஞ்சரிக்கையாலே
அவர்கள் பாதரேணு படும்படி, வழியாய்க் கிடக்கும் துணிவுடையனாவேனே என்கிறார். “தொண்டரடிப் பொடி ஆட நாம் பெறில் ” (பெருமாள் திருமொழி 2.2) என்று இந்த ஆழ்வார் இருக்கிறார் என்கிறார்.

சிவபெருமான் தலையில் விரிந்த சடைமுடியுடன் இருப்பது, அவரே ஒரு தவம் செய்பவர் போலத் தோற்றமளிக்கிறார். அதே சமயம், அந்தச் சடையில் குளிர்ச்சியும் இன்பமும் தரும் இளம் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பது, தன்னை அண்டியவர்களுக்கு இன்பத்தையும் பலன்களையும் அள்ளித் தரும் சுகத்தை அளிப்பவனாக, அவர் விளங்குகிறார் என்றும் கொள்ளலாம்.

பிரமன், சிவன், மற்றும் தேவேந்திரன், தங்கள் தங்கள் அதிகார அணுகுணமாகப் பண்ணும் யாகங்களுக்கு பலனான அதிகாரங்களை கொடுக்குமவன்; வேதங்களின் உட்பொருளுமாக இருப்பவன்; திருவேங்கடமுடையான் என்கிறார்.

பக்தர்கள் செல்லும் வழியில் ஒரு படியாக இருந்தால், எல்லா பக்தர்களும் அந்த வழியே தான் செல்வார்கள் என்று சொல்ல முடியாது, ஆகையால் தான் எல்லா பக்தர்களுக்கும் சேவை செய்ய முடியாது. எங்கேயோ ஒரு படியாக இருப்பதைக் காட்டிலும் அது பெருமாளின் வாசல் படியாக இருந்தால், அதற்கு பெருமாளின் தரிசனம் எப்போதும் கிடைக்கக்கூடும், எல்லா பக்தர்களின் பாதத்துளிகளும் படும், ஆதலால், தான் அங்கு ஒரு வாசற்படியாக வேண்டும் என்று அடுத்த (9) பாசுரத்தில் தனது விஷேச விருப்பத்தை வேண்டுகிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply