திவ்ய பிரபந்தம்

Home

PT 2.2 தோடுலா மலர்

தோடு உலாம் மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் * நீடு மாமரம் செற்றதும் நிரை மேய்த்தும் இவையே நினைந்து * ஆடிப்பாடி அரங்கவோ என்றழைக்கும் தொண்டரடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை யென்னாவதே

பெருமாள் திருமொழி 2.2

இதழ்கள் அதிகமாக உள்ள தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியாருடைய திருத்தோள்கள் இரண்டையும் அணைந்தருளியதும் புகரை உடைய அம்பினால் உயர்ந்த மராமரங்கள் ஏழையும் துளைத்ததும், பசுக் கூட்டங்களை மேய்த்ததும் இந்த சேஷ்டிதங்களையே எண்ணி பரீதியின் மிகுதியாலே ஆடிப்பாடி அரங்கனே என்று கூப்பிடுகிற தொண்டர்களான ஸ்ரீவைஷ்ணவர்களின் பாதத் துளிகளிலே நாம் அந்வயிக்கப் பெற்றால் கங்கையின் நீரில் அனுபவித்து நீராடுதலில் உண்டாகும் ஆசையானது எதற்கு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் என்றது தனியாக ஒருவன் பெரிய வெள்ளத்தில் மூழ்கி அனுபவிக்க நினைத்தது போல என்கிறார்.

நீடு மாமரம் செற்றதும் என்றது நெடுங்காலமாக துளை செய்து வைத்து இருந்த மரங்களில் அம்பு விட்டது போல எளிதாக விரைவாக ஏழு ஒன்றுக்கு ஒன்று ஒப்பான, வலுவான மரங்களின் உள்ளே சென்றது என்கிறார்.

நிரை மேய்த்தும் இவையே நினைந்து என்றது உபய விபூதிக்கும் நாயகனாயிருந்தவன், கையிலே ஒரு கோலைக் கொண்டு பசு மேய்த்தது என்கிறார். இந்த ஸ்ரீலாதி குணங்களையே நினைந்து, இவற்றை நினைப்பதைத் தவிர வேறு ஒரு பயனையும் நினைக்காமல் இருப்பது என்கிறார்.

தொண்டரடிப்பொடி என்றது பகவத் குணங்களா லே வசீகரிக்கப்
பட்டிருப்பவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாத துளி கிடைக்க பெற்றால் என்கிறார்.

கங்கை நீர் குடைந்தாடும் என்றது பல சிக்கு ஜடைகள் உடைய சிவன் தலையில் பட்டு வரும் கங்கை நதி என்கிறார். பெரியாழ்வார் திருமொழி (4.7.2)ல் ‘நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்துழாயும் கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே‘ என்று பாடியதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply