திவ்ய பிரபந்தம்

Home

PT 2.3 ஏறடர்த்ததும்

ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதுமா ம் முன் இராமனாய் * மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி வண் பொன்னிப் பே * ராறு போல் வரும் கண்ண நீர் கொண்ட ரங்கன் கோயில் திருமுற்றம் * சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே

பெருமாள் திருமொழி 2.3

(நப்பினை பிராட்டிக்காக) ஏழு எருதுகளை அடக்கி கொன்றது, (ஸ்ரீ பூமிபிராட்டிக்காக) மஹா வராஹமாய் பூமியை தந்தத்தினால் குத்தி
ஒட்டு விடுவித்ததும், இராவணன் பிராட்டியைப் (சீதா) பிரித்தவன் என்று சக்கரவர்ததி திருமகனாய்ப் பிறந்து, விரோதியான இராவணனைக் கொன்றதும் (இந்த்ரனுக்காக) மஹாபலி எடுத்துக்கொண்ட பூமியை த்ரிவிக்ரமனாய் உலகளந்ததும் ஆகிய செயல்களை வாயாராச் சொல்லி, பிரீதி மிகுதியால் பாடி, பெரு வெள்ளமிட்டு வரும் காவேரி போல் வருகிற கண்ணீரினால் ரங்கநாதனின் கோயிலின் உள் திருமுற்றத்தை சேறாக்குகிற வைஷ்ணவர்களின் திருவடிகளால் மிதிக்கப்பட்ட அழகிய சேற்றை என் தலையிலே தரித்துக் கொள்வேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நப்பினை பிராட்டியுடன் நட்பு பாராட்ட தடையாய் இருந்த ஏழு ரிஷபங்களையும் கொன்றதும், ஸ்ரீ பூமி பிராட்டிக்கு நட்பு பாராட்ட விரோதியாக அவளுடையதான பூமியை பிரளயம் கொள்ள, உதவி செய்ய வில்லை என்று அவப்பெயர் வராதபடி அவளுக்கு உரிமையான பூமியை மஹாவராஹமாய் அண்ட பித்தியிலே சென்று ஒட்டின பூமியை ஓட்டு மொத்தமாக விடுவிதித்தும், பிராட்டியை பிரித்த இராவணனை எதிரியாக்கி கொன்றதும், பிராட்டிகளின் சேர்வதற்கு எதிரியாக இருந்த விரோதிகளை போக்கியது போல, இந்திரனோடு விரோதித்த மஹாபலி கைக்கொண்ட பூமியை மீட்டு எல்லைநடந்து கொடுத்ததும் என்ற சரித்திரங்களை சொல்லி பரீதியாலே பாடியதைச் சொல்கிறார்.

காவேரி பெரு வெள்ளமாய், அகில் சந்தனம், முத்து போன்ற மலைப் பண்டங்களை கொண்டு வருவதைப் போல அமைக்க நில்லாத வெள்ளமிடுகிற கண்ணீரைக் கொண்டு அங்கு பாங்காக திருப்பணி செய்து வைத்தால் இவர்கள் அத்தைக் கண்ணீராலே சேராக்குகிறார்கள் என்கிறார். அமங்கலமான புழுகுநெய்யாலே (புழுகுசட்டத்திலிருந்து எடுக்கும் நறுமணப்பொருள்) அலங்கரித்துள்ள தோஷம் தீர மங்களகரமான ஸ்ரீ வைஷ்ணவர்களின் திருவடிகளின் அழகிய சேற்றை அணிவது என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply