தோய்த்த தண்தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று * ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் என் அரங்கனுக்கு * அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது * ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்து மென் நெஞ்சமே
பெருமாள் திருமொழி 2.4
தோய்க்கப்பட்டு குளிர்ந்துள்ள தயிரையும், வெண்ணெய்யும் பாலையும் ஒரே சமயத்தில் அமுது செய்தவுடன் யசோதைப்பிராட்டி கையும் களவுமாகப் பார்த்து கோபித்து (பின்னர்) அவளால் கட்டப்பட்ட கைகளை உடையவனாய் என்னுடைய ஸ்வாமியாய் எனக்கு சேஷியான அழகிய மணவாளனக்கு சேஷ பூதராய் நாவானது தழும்பு ஏறும்படி நாராயணா என்று கூப்பிட்டு உடம்பில் தழும்பு ஏறும்படி நமஸ்காரம் செய்து துதித்து ஆனந்தம் அடையும் ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளை என் மனம் ஸ்தோத்திரம் பண்ணி மங்களாசாசனம் செய்யும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தயிர், வெண்ணைய் மற்றும் பால் இவற்றை ஒரே சமயத்தில் உண்டதை கண்டுபிடித்த யசோதை ‘தீராவெகுளியளாய்‘ (சிறிய திருமடல், 36) சொல்லியது போல மிகவும் கோபித்தாள்; கோபித்ததால் ஸ்னேகத்திற்கு அவதி உண்டாயிற்று. கையை பிடித்து கட்டினாள். இப்படி அடியவரின் ஸ்பரிசம் பட்ட பொருளினால் (யசோதா தொட்டு கட்டிய கயிறு) இல்லாமல் அவன் செல்லாததால், ஆழ்வார் அவன் இல்லாமல் தனக்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்தார். கிருஷ்ணாவதார காலத்தில் இழந்தத்தை, இழவு தீர வந்து சுலபரான பெரிய பெருமாளுடைய செயலாலே எழுதிக் கொடுத்தவர்கள் என்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply