பொய் சிலைக் குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவு ஈர்த்த கோன் * செய் சிலைச் சுடர் சூழ் ஒளித் திண்ண மாமதிள் தென்னரங்கனாம் * மெய் சிலைக் கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழப் போய் * மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே
பெருமாள் திருமொழி 2.5
(அசுராவேசத்தாலே) வஞ்சக எண்ணத்துடனும் கோபத்துடனும் கூடியதான முழக்கத்தை உடைய, (நப்பினை பிராட்டியுடன் கூடுவதற்கு விரோதியாக இருந்த, இடி போல கோரமான குரலுடன் இருந்த , ஏழு) காளைகளின் கழுத்துக்களை முறித்தவனாய், (திருவாய்பாடியில் பசுக்களும் இடையர்களும் தண்ணீர் குடிக்க முடியாதபடி ஜலத்தை கெடுத்து வைத்து இருந்த), யுத்தம் செய்ய வந்த காளியன் என்னும் பாம்பை கொன்று (ஆய்பாடிக்கு) ஸ்வாமியானவனாய், கல்லினால் செய்யப்பட்டு மிகவும் ஒளி பொருந்தியதாய் வலிமை பொருந்தியதாய் உயர்ந்ததான மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்திலே நித்யவாசம் செய்யும் பெரிய பெருமாளாகிற சரீரத்தில் வில்லுடன் கூடிய நீலமேகமானது தங்களுடைய மனதில் நிலைத்து விளங்கும்படி மயிர்க்கூச்செறியும் தேகத்தை உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களையே என் மனமானது நினத்து மயிர்க்கூச்செறியும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஆஷுராவேஷத்துடன் வந்த ரிஷபம் என்பதால் இதனை பொய் ரிஷபம் என்கிறார்.
மெய் சிலைக் கரு மேகம் என்றது உடம்பிலே வில்லை உடைய மேகம் என்று உரைத்தல். மெய்யே வில்லோடே கூடின மேகம் என்று உரைத்தல். ஸோபயந் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா |
அத்ருச்யத ததோ ராமோ பாலசந்த்ர இவோதித: II (ஆரண்ய காண்டம் 38.15), அதாவது, பிரகாசித்து நிற்கும் தன் ஒளியினாலே தண்டகாரண்யத்தை அலங்கரித்துக் கொண்டு அப்போது உதித்த இளஞ் சந்திரனைப் போல் ஸ்ரீராமபிரான் காணப்பட்டான். மாணிக்கக் குப்பியில் உள்ளே நின்ற நிலை புறம்பே தெரிவதைப் போலே பெரிய பெருமாளைத் தங்கள் நெஞ்சிலே எழுந்தருளுவித்து வைக்கையாலே நிழல் ஆடாமல் இருக்கும் நிற்கும் அன்றோ என்கிறார். பெரிய பெருமாளை பார்த்து துடிதுடித்து அனுபவித்த ஸ்ரீவைஷ்ணவர்கள் உடம்பு பட்ட பாடு, அவர்களை அனுபவித்து, தான் படாமல் இருந்ததாக தன்னை தாழ்த்தி கூறுகிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply