திவ்ய பிரபந்தம்

Home

PT 2.6 ஆதி அந்தம்

ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் * பாத மா மலர் சூடும் பத்தியிலாத பாவிகள் உய்ந்திட * தீதில் நன்னெரி காட்டி யெங்கும் திரிந்த அரங்கன் எம்மானுக்கே * காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என்னெஞ்சமே

பெருமாள் திருமொழி 2.6

ஜகத்காரணபூதனாய், பிரளய காலத்திலும் ஒரே நிலையில் வாழ்பவனாய், எல்லா பொருட்களிலும் வியாபித்து நிற்குமவனாய், ஆச்சரியபூதனாய், அழிவற்ற நித்ய சூரிகளுக்கு ஸ்வாமியான அரங்கனுடைய ஒப்பற்ற தாமரைப் பூ போன்ற திருவடிகளை தலையில் தாங்கும்படியான, பக்தி இல்லாத பாவிகளும் உய்யும்படி எல்லா இடங்களிலும் சஞ்சரித்து குற்றமற்ற நல்ல வழிகளை (தாம் செய்து) காட்டுமவர்களாய் என்னுடைய ஸ்வாமியான ஸ்ரீ ரங்கநாதனுக்கே அன்பு பூண்டவர்களான அடியார்களிடத்தில் என்னுடைய மனம் எல்லா ஜன்மங்களிலும் (அடிமை செய்ய வேண்டுமென) ஆசைப்படும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

காரண அவஸ்தையிலும்(ஸ்ருஷ்டியினால் உண்டாகும் அவஸ்தை) காரிய அவஸ்தையிலும் ஒரே போல வியாபித்து நிற்பவன் என்கிறார். காரிய அவஸ்தையோடு நிலையாக நிற்பது போல எப்போதும் அப்படியே இருப்பது ஆச்சரியம் என்கிறார்.

அமிழ்ந்த போதும் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும் நித்ய சூரிகளுக்கு நாதன், உபயவிபூதிநாதன் என்பதை வானவர் தம்பிரான் என்கிறார். அவனுடைய திருவடிகளை தலையில் சூடிக்கொள்ளும் பக்தியை உடையவர்களாக இருப்பது சிறந்தது. அப்படி பக்தி இல்லாத மஹாபாவத்தை செய்து இருக்கிறவர்களை, உஜ்ஜீவிப்பிக்கைக்காக தேசமெங்கும் சென்று அவர்களுக்கு பக்தி உண்டாக்குகிறார்கள்.

அஸந்நேவ ஸ பவதி | அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் 1
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோ விது:

ப்ரம்ம் இல்லையென்று அறிந்தானாகில் அவன் இல்லாதவனாகவே ஆகிறான்; ப்ரஹ்மம் இருக்கிறதென்று அறிந்தானாகில் அக்காரணத்தினாலேயே இவனை உள்ளவனாக அறிகிறார்கள்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply