திவ்ய பிரபந்தம்

Home

PT 2.7 காரினம் புரை மேனி

காரினம் புரை மேனி நல்கதிர் முத்த வெண் நகைச் செய்ய வாய் * ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை * சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து கசிந்து இழிந்த கண்ணீர்களால் * வார நிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகும் என் நெஞ்சமே

பெருமாள் திருமொழி 2.7

மேகங்களின் கூட்டத்தை ஒத்த திருமேனியையும் அழகிய ஒளியையும் முத்துக்கள் போல வெளுத்த பற்களையுடைய சிவந்த வாயையும் முத்து மாலை அணிந்த மார்பையும் உடையவனான ரங்கநாதனாகிற கிடைத்தற்கரியதும் பெருமை பொருந்தியதுமான ஒப்பற்ற தேஜஸ்யை அடைந்து அனுபவிக்க வேண்டும் என்ற மனம் உடையவராய் அவனை அடைந்து (பக்திப் பெருக்காலே) கரிந்து பெருகும் கண்ணீர் ஆனது, பெருகி ஒடும்படி நிற்பவர்களுடைய இரு திருவடிகள் விஷயத்திலும் என் நெஞ்சு (பிரதிபலனை கருதாத) ஒப்பற்ற அன்பு செய்யும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

காரினம் புரை மேனி என்பதை ‘தொக்க மேகப் பல்குழாங்கள்‘ என்று திருவாய்மொழி (8.5.8) மற்றும், ‘கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே‘ என்று திருமாலை (32) பாசுரங்களில் மற்ற ஆழ்வார்களும் அருளிச் செய்கிறார்கள்.

நல்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய் என்று சொன்னது, கண்டாரை போகாமல் இருக்க வல்ல வெண்மையை உடைய முத்து நிரை போல இருக்கும் தந்த முறுவல் என்றும் அதனை பிரகாசிக்கும்படி செய்யும் பழுப்பு நிற திருவதரமும் இருக்கிறது என்கிறார்.

ஆர மார்வன் என்று சொல்வதை, மூன்றாம் திருவந்தாதியில் (55) ஆழ்வாரும், ‘பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு‘ என்று குறிப்பிடுகிறார். ஐஸ்வர்ய பிரகாசம் இட்டுப் பூண வேண்டும்படியுள்ள ஹாரத்தையும் திருமார்பிலே உடையவர் என்கிறார்.

பெரிய பெருமாள் என்று உபய விபூதியிலும் பிரசித்தி பெற்றவராய் எப்போதும் தேஜஸ் ரூபமாய் என்கிறார். அப்படிப்பட்ட அவர் வந்து கிட்டும் போது விலக்காததால் வந்த பக்தி உடையவர்களாய் அவனை அடைந்து கண்ணும் கண்ணீரும் நிற்பவர்களின் பக்தி பிரவசத்தாலே, இவர்களுக்கும் எம்பெருமானுக்கும் என்று இல்லாமல் இவர்களுடைய திருவடிகளுக்கு மட்டுமே என்கிறார். வேறு எந்த பலனையும் எதிர்பாராமல் நின்றது என் நெஞ்சு என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply