திவ்ய பிரபந்தம்

Home

PT 2.8 மாலையுற்ற கடல்

மாலை உற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறுந்துழாய் * மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை மலர்க் கண்ணனை * மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே * மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே

பெருமாள் திருமொழி 2.8

(தன் திருமேனியைத் தீண்டுவதால் களிப்படைந்து அதனால்) அலை எறிகிற திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனும் வண்டுகள் குடைந்து நின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்த மலை போல விசாலமான திரு மார்பை உடையவனும், செந்தாமரை போன்ற திருக்கண்களை உடையவனுமான பெருமான் விஷயத்திலே, அன்பு பூண்டு நின்ற இடத்தில் நில்லாமல் கூத்தாடிப் பாடி திரிந்து அரங்கநாதனாகிய என் ஸ்வாமிக்கே பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மிக்கு என் மனம் அன்பு பூண்டு இருக்கின்றது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

“மைபோல் நெடுவரைவாய், தாழும் அருவி போல் தார் கிடப்ப” (மூன்றாம் திருவந்தாதி 59), என்று பேயாழ்வார் அருளினார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply