மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று * எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்தாடிப் பாடி இறைஞ்சி என் * அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே * பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே
பெருமாள் திருமொழி 2.9
கண்கள் மழை தாரை போல ஆனந்தக் கண்ணீர் பொழியவும் சரீரம் மயிர்க்கூச்செறியவும் (பகவானை நினைத்து) ஏங்கித் தளர்ந்து நின்று நிலை கலங்கி கும்பிடு நர்த்தனம் பண்ணி, எழுந்து ஆட்டங்கள் ஆடி, பாட்டுக்கள் பாடி, வணங்கி என் தந்தையும் ஸ்வாமியுமான திருவரங்கனுக்கு அடிமைகளாக ஆகி, அந்த பெரிய பெருமாளுக்கே (பக்தி பூண்டு) பித்தேறித் திரிபவர்கள் பித்தர்கள் அல்லர். இம்மாதிரியான பக்தி இல்லாத மற்ற பேர்களே பைத்தியம் பிடித்தவர்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பித்தேறித் திரிவார்க்கோ நீர் பித்தேறுவது என்று கேட்டு அடையவேண்டிய (ப்ராப்த) விஷயத்தில் பித்தேறுமவர்கள் பித்தர் அன்று என்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply