செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே * நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் * அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் * படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே
பெருமாள் திருமொழி 4.9
பாவ பலன்களான கொடிய சம்சார பந்தத்தை போக்கி அருளுகின்ற திருமகளின் மணவாளனான எம்பெருமானே ! (அடியவர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதில்) எல்லை காண முடியாதவனே ! திருவேங்கடமுடையானே ! உன் கோயிலின் வாசலிலே, (எம்பெருமானைத் தவிர வேறு எந்த பயனையும் எதிர்பார்க்காத) ஸ்ரீ வைஷ்ணவர்களும் , (தங்களுக்கு தேவையான பயன்களை வேண்டும்) தேவர்களும், (பிறர்க்கு அடிமை பூண்டுள்ள) ரம்பை முதலிய தேவப் பெண்களும், கூடி சஞ்சரிக்கப் பெறும் படியாகக் கிடந்து உனது பவளம் போன்ற திருவதரத்தை காண்பேனாக என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தன் திருவடிகளிலே தலை சாய்த்தாருடைய பாவ பலனான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் அவன் என்கிறார். செடி என்பது பாவம் என்ற அர்த்தத்தில் இங்கு வருகிறது.
திருமாலே என்பதனை ஸம்சாரத் துன்பம் அல்லது பாவ பலன்களால் ஏற்படும் துக்கத்தை ஏற்பாடு செய்வது, அதாவது, சம்சார துன்பத்திற்கு காரணமாக இருக்கும் செயல்களை / சூழல்களைத் தாமே அருகிலிருந்து செய்து வைப்பவர்களும் துக்கத்தை சேர்க்கும் சூழல்களும் உண்டாவது என்கிறார்.
நெடியானே என்பதற்கு, திருமகளே என்றாலும், ‘என்னால் பொறுக்க முடியாது’ என்ற போது ‘என்னடியார் அது செய்யார் ‘ (பெரியாழ்வார் திருமொழி 4.9.2) என்று அடியவர்கள் விஷயத்தில் பாரபட்சம் காண்பிப்பதில் எல்லை காணாத முடியாதவன் என்கிறார்.
எம்பெருமானைத் தவிர வேறு எந்த பயனையும் விரும்பாதவரும், தங்களுக்கு வேண்டியவற்றை விரும்புவர்களும் மற்றவர்களும் சஞ்சரித்துக் கொண்டு இருந்தாலும் ஒரு நினைவும் இல்லாமல் கிடக்க வேண்டும் என்கிறார்.
பாரதந்திரியம் அல்லது அன்பாலும், இயல்பான அடிமைத் தன்மையாலும், இன்பத்துடனும் எம்பெருமானுக்கும் அவன் அடியார்களுக்கும், அவர்கள் இஷ்டப்படி செயல்பட்டு, தனக்கெனத் தனிப்பட்ட விருப்பமோ, கோபமோ, சுயநினைவோ இன்றி இருப்பதற்கு ஞானம் இல்லாத சமாதி நிலையில் இருக்க வேண்டும் என்றும் அது தான் அடைய வேண்டிய இலக்கு என்றும் கூறுகிறார்.
திருமலை கோவில் சன்னதியில் உள்ள கருங்கற்படிகளை, ஒரு நாள், தங்கப்படிக்கட்டுகளாக மாற்றலாம், அதனால், தான் திருமலையை விட்டு செல்ல நேரிடும், சுவாமியின் திருமுக மண்டல சேவையை இழப்போம் என்று கருதி, தாமாக ஒரு பிறவியும் வேண்டிக்கொள்ள விழையாதவராய், “எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே” என்று அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply