வானாளும் மாமதி போல் வெண் குடைக்கீழ் மன்னவர் தம் * கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வு அறியேன் * தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடமலை மேல் * கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே
பெருமாள் திருமொழி 4.7
ஆகாசத்தை ஒளியால் பரவி இருக்கிற பூர்ண சந்திரனைப் போன்ற வெண் கொற்றக் குடையின் நிழலிலே ராஜாதி ராஜனாய் கொலு இருந்து (எல்லோராலும்) கொண்டாடத் தக்க செல்வத்தை நான் ஒரு பொருளாக நினைக்க மாட்டேன். தேன் மிகவுள்ள புஷ்பச் சோலைகளை உடைய திருமலையின் மேலே ஒரு காட்டு ஆறாய் பாயும்படியான கருத்தை உடையவனாக ஆவேன்.
திருமலையில் சிகரம் ஆனால் ஏற முடியவர்கள் அனுபவித்து, முடியாதவர்கள் இழப்பதாக இருக்கிறது என்கிறார். அப்படி இல்லாமல் எல்லோருக்கும் அனுபவம் கொடுக்கும் காட்டு ஆறாக, தான் ஆக வேண்டும் என்கிறார்.
ஆகாயப் பரப்பு எல்லாம் சந்திரன் ஒருவனே ஆள்வது போல உலகமெல்லாம் தன் வெண்கொற்றக் குடை கீழே ஒதுங்கும்படி, நட்சத்திரங்கள் எப்படி சந்திரனை சேவித்து இருக்குமோ அதே போல அரசர்கள் எல்லாம் வந்து சேவித்து இருக்கும்படி ராஜராஜனாய் வீற்று இருந்து கொண்டாடும் செல்வம் எனக்கு உடன் பாடு இல்லை என்கிறார்.
காட்டாறு மலைகளில் பாய்ந்து, தாழ்ந்த இடங்களிலும் தானே சென்று அனைவருக்கும் நீர்/அனுபவம் தருவது போல, தாமும் எவ்விதத் தடையுமின்றி அனைவருக்கும் கைங்கரியம்/அனுபவம் அளிக்க வேண்டும் என்று ஆழ்வார் திருமலையில் காட்டாறாக வேண்டும் என்று வேண்டுகிறார்.
காட்டாற்றில் எல்லா நேரமும் தண்ணீர் இருக்கும் என்று சொல்ல முடியாது, சில சமயம் ஆறு வற்றி விடும், அதனால் தான் திருமலையில் வசிக்க முடியாமல் போய்விடும், ஆகையால், பக்தர்கள் செல்லும் வழியில், அவர்களின் பாத துகள்கள் படும்படி, தான் திருவேங்கட மலையில் ஒரு படியாக வேண்டும் என்று தனது அடுத்த பாசுரத்தில் (8) வேண்டுகிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply