திவ்ய பிரபந்தம்

Home

PT 4.6 மின் அனைய

மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும் * அன்னவர் தம் பாடலொடு ஆடல் அவை ஆதரியேன் * தென்ன என வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் * அன்னனைய பொற் குவடு ஆம் அருந் தவத்தன் ஆவேனே

பெருமாள் திருமொழி 4.6

மின்னல் போல நுண்ணிய இடையை உடையவர் ஆகிய ஊர்வசியும் மேனகையும் போன்ற அழகிய பெண்களின் ஆடல் பாடல் முதலியவற்றை நான் விரும்பவில்லை; வண்டுகளின் கூட்டங்கள் ‘தென தென ‘ என்று ஆலாபனை செய்து இசையுடன் பாடப்பெறும் திருவேங்கட மாலையில் ஒப்புயர்வற்ற சிகரமாவதற்கு உரிய மேலான தவத்தை உடையவனாகக் கடவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தாவரமானால் ஒரு நாள் அல்லது ஒரு நாள் இல்லாமலே போகும் அல்லவா; அப்படி இல்லாமல் என்றும் எப்போதும் இருக்கும் திருமலையில் தான் இருக்க வேண்டும் என்கிறார்.

தான் ஒரு சிகரமாக இருக்கும்போது, புதிய கோவில்கள் கட்டுவதற்காக அந்த சிகரத்தை உடைத்து அதன் கற்களை யாரேனும் எடுத்துச் செல்வர், ஆகையால் ஆழ்வார், தான் திருமலையில் ஒரு காட்டாறாக பிறக்க, அடுத்த பாசுரத்தில் (7) வேண்டுகிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply