திவ்ய பிரபந்தம்

Home

PT 4.5 கம்ப மத யானை

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேலிருந்து * இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் * எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் * தம்பமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே

பெருமாள் திருமொழி 4.5

(கண்டவர்கள் எல்லாம்) நடுங்கும்படி மதங் கொண்ட யானையினுடைய கழுத்தின் மேல் (பெருமை தோன்ற) வீற்று இருந்து எல்லா போகங்களையும் அனுபவிக்கும்படியான ஐஸ்வரியத்தையும் (அதற்கு சாதனமான) இந்த அரசாட்சியையும் நான் விரும்பமாட்டேன். எனக்கு ஸ்வாமியும் எல்லா உலகுக்கும் தலைவனுமான ஸ்ர்வேஸ்வரனுடைய அழகிய திருமலையிலே (ஒரு காரியத்திற்கும் உதவாத) தம்பக மரமாய் இருக்கும்படியான பாக்கியத்தை உடையவனாகக் கடவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

செண்பகமானால் பரிமளத்திற்காக உள்ளே கொண்டு புகுவார் என்று ஒரு பயனும் இல்லாத தம்பமாக இருக்க வேண்டுகிறார்.

கண்டவர்கள் எல்லாம் நடுங்கும்படி மதிப்பை உடைய யானை என்கிறார். மதநீர் பெருகுவதால் உண்டாகும் உக்கிரத்தாலும் வேகத்தாலும், கட்டப்பட்ட கம்பத்திலிருந்து அவிழ்த்து விட முடியாதபடி / கட்டுப்படுத்தக் கடினமானதாக நிற்கும் யானை என்றும் பொருள் கொள்ளலாம்.

மற்றவர்களால் அடக்க முடியாத வலிமை கொண்டதாக இருந்தாலும், அரசர்களிடம் அடங்கி, அரசர்கள் தம்மை மேற்கொள்ள இணங்கிவிடும் அல்லவா யானைகள்! எல்லோருக்கும் பயப்படும் யானையை அடக்கி, ஆழ்வார் தன் கருத்திலே நடுத்துகிறார்.

எம்பெருமான் ஈசன் என்பதும் , சரணாகதி கத்யத்தில் ஸ்வாமி இராமானுஜரர் சொல்லிய அகில ஜகத் ஸ்வாமிந், அஸ்மத் ஸ்வாமிங் , அதாவது எல்லா உலகுக்கும் ஸ்வாமியே! என்னுடைய ஸ்வாமியே ஒன்றே.

ஒரு பயனும் இல்லாத தம்பகமாய் அங்கே முளைத்து அங்கேயே தீய்ந்து போவதொரு தம்பகமாய் ஆவேன் என்கிறார். இது அநேக ஜன்மங்களின் தவ பலம் என்று இருக்கிறார்.

ஸ்தம்பமாய் இருந்தால், அதை அரசாங்கத்தார் வெட்டியோ, தீ வைத்து கொளுத்தியோ அழித்துவிடுவார்கள் என்று எண்ணி, ஆழ்வார், திருமலையில் ஓர் பொன்மயமான சிகரமாக வேண்டும் என்று தனது அடுத்த பாசுரத்தில் (6) கேட்டுக் கொள்ளுகிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply