திவ்ய பிரபந்தம்

Home

PT 5.7 எத்தனையும்

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் * மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்றவைப் போல் * மெய்த் துயர் வீட்டா விடினும் விற்றுவக்கோட்டம்மா என் சித்தம் மிக உன் போலே வைப்பன் அடியேனே

பெருமாள் திருமொழி 5.7

வித்துவக்கோட்டு அம்மா, மேகங்களானவை எவ்வளவு காலம் மழை பெய்யாதிருந்தாலும் பசுமை தங்கிய பயிர்கள் கரு நிறத்துடன் எழும் பெரிய மேகங்களையே பார்த்த வண்ணமாயிருக்கும். அப்பயிர்களைப் போல கட்டாயமாக அனுபவித்துத் தீர வேண்டிய துன்பங்களை நீ போக்கவிட்டாலும் அடியவனாகிய நான் என் மனதை உன் விஷயத்திலேயே மிகவும் செலுத்துவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கார்காலத்தில் மழை பொழியாமல் மேகங்கள் மறுத்த காலத்திலும், ஆகாயத்திலே கறுத்த மேகங்களைப் பார்த்திருக்குமே தவிர, வேறு ஒரு நீர்நிலை தேடி போவதில்லை என்பது போல் என்கிறார்.

அவஸ்ய மநு போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் * நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடி ஸதைரபி என்ற வாக்கியத்தின் படி, மனிதனால் செய்யப்பட்ட புண்ய பாப ரூபமான கர்மங்களின் பலன் கட்டாயம் அனுபவிக்கப்பட வேண்டியதே. நூறு கோடி கல்பங்களானாலும் கர்மம் அனுபவியாமல் கழியாது. அவஸ்ய மநு போக்தவ்யம் என்கிற பாவத்தைப் போக்கி சம்சார பந்தம் அறுத்துக் கொடுக்க வந்திருக்கிற நீ அது செய்யா விட்டாலும், என் பாதுகாப்பில் நெகிழ்ந்தாய் என்று தோன்ற என் நெஞ்சு எங்கும் செல்லாமல் எம்பெருமானிடம் நிலைத்து நின்றது.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply