திவ்ய பிரபந்தம்

Home

PT 5.6 செந்தழலே

செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம் * அந்தரம் சேர் வெங்கதிரோனுக்கு அல்லால் அலர் ஆவால் * வெந்துயர் வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா உன் * அந்தமில் சீர்க்கல்லால் அகங்குழைய மாட்டேனே

பெருமாள் திருமொழி 5.6

சிவந்த நெருப்பானது அருகில் வந்து, உஷ்ணத்தை உண்டாக்கினாலும் செந்தாமரையானது ஆகாயத்தில் பிரகாசிக்கும் கடுமையான கிரணங்களை உடைய சூரியனுக்கு மலருமே அல்லாது (அந்த நெருப்புக்கு) மலராது; வித்துவக்கோட்டு அம்மா (அனுபவித்தே கழிய வேண்டிய) எனது கொடிய பாவங்களை, நீ போக்காவிட்டாலும் உன்னுடைய எல்லை காணமுடியாத கல்யாண குணங்களுக்கு அல்லது (மற்றொன்றுக்கும் நான்) நெஞ்சுருக மாட்டேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மிக்க கொடூரமான நெருப்பு அருகே வந்து வெப்பத்தைக் கொட்டினாலும், தாமரையானது ஆதித்யன் வெகு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய ஒளி கிரணங்களுக்கு மலருமே தவிர, நெருப்பு அருகில் இருந்தாலும் அதனுடைய வெப்பத்திற்கு மலராது.

அனுபவங்களினால் வாழ்வை நாசம் செய்யும் பாவங்களைப் போக்கி ஆன்மாவிற்கு வாழ்வை அளிப்பதற்கு வந்து இருக்கிற எம்பெருமானே, நீ, மறுத்தாலும் அல்லது துக்கத்தை விளைவித்தாலும், உன்னுடைய கல்யாண குணங்களுக்கு அல்லாது என்னுடைய நெஞ்சு நெகிழாது என்கிறார். அதாவது உன் கல்யாண குணங்களுக்கே என் நெஞ்சு ஈடுபடும் என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply