பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் * துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல் * மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான் உமிழும் * பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன் ஆவேனே
பெருமாள் திருமொழி 4.3
பின்னப்பட்ட ஜடையை உடைய சிவனும், பிரஹ்மாவும், தேவேந்திரனும் ஒருவருக்கொருவர் நெருக்கியும் உள்ளே பிரேவேசிக்க முடியாமல் இருக்கின்ற (பூலோக) வைகுந்தமாகிற திருமலையின் நீண்ட திரு வாசலிலே மின்னலை வளைத்தது போல சுடர் விடும்படியாக உள்ள திருவாழி ஆழ்வானை உடைய, திருவேங்கடமுடையான் வாய் நீர் உமிழும் தங்க வட்டிலைக் (பொற்காளாஞ்சி) கையில் ஏந்திக் கொண்டு அந்தரங்க கைங்கர்யம் செய்பவர்களுடன் நானும் உள்ளே புகும் பாக்கியம் பெறக் கடவேன் என்பது இந்த பாசுரத்தின் பொழிப்புரை.
பின்னப்பட்ட ஜடை என்றும் பின்னே நாலப்பட்ட சடை என்றும் தந்தைக்கு பின்னே வரும் சடையான் என்றும் ருத்திரனை சொல்கிறார்.
இந்திரன், பிரம்மன், சிவன் போன்றவர்களே ஒருவருக்கு ஒருவர் முன்னே செல்ல வேண்டி நெருக்குகையாலே புக அரிதாக உள்ள வைகுந்த நீள் வாசல் என்கிறார்.
மின்னலை வளைத்ததைப் போல ஜோதிஸ் உடைய, சுற்றும் வாயை உடைய, திருவாழி ஆழ்வான் என்கிறார்.
பிரம்மா ருத்திரன் இந்திரன் நெருக்கி புக முடியாத இருக்க, ‘பணிக்காக இவனே புகுர விடு ‘ என்று உள்ளே அந்தரங்க சேவை செய்பவர்களுடன் நானும் அவர்களில் ஒருவனாய் புக வேண்டும் என்கிறார்.
பொன் என்றால் கர்வம் வரலாம் என்பதாலும், சாதாரண தொண்டனாகிய தான் அந்த பொன்னில் ஆசைப்பட்டு அதை களவாடி சிறை செல்லக்கூடும் என்று அஞ்சியும், ஆழ்வார் தன்னுடைய அடுத்த பாசுரத்தில், (4) செண்பக மரமாக வேண்டுகிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply