அங்கை ஆழி அரங்கன் அடியிணை தங்கு * சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய் * கொங்கர் கோன் குல சேகரன் சொன்ன சொல் * இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்றில்லையே
பெருமாள் திருமொழி 3.9
அழகிய திருக்கையிலே திருவாழி ஆழ்வானை உடைய அழகிய மணவாளனின் திருவடிகளில் ஈடுபடும்படியான மனம் உடையவராய், மிகவும் அன்பு உடையவராய், மேற்கு திக்குக்கு அதிபதியான குலசேகரஆழ்வார் அருளிச் செய்த இப்பாட்டுக்களை கற்றவர்களுக்கு இந்த உலகத்தில் (பகவத் அனுபவத்திற்கு ) ஒரு வித இடையூறும் ஏற்படாது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அழகிய மணவாளாப்பெருமாளின் திருவடிகளை விட மேலாகச் சென்று அடைய வேண்டிய வேறு எந்த இலக்கும் இல்லாததால், அவற்றிலேயே நிலைத்து இருக்கும் மனநிலையுடையவர் என்பது விளங்கும்.
ஏதமாவது , பாகவதர் அல்லாதவருடன் தொடர்பு, பகவத் ஈடுபாட்டில் குறை அல்லது தளர்ச்சி ஏற்படுதல், போன்ற துக்கம் ஒன்றும் இந்த ஸம்ஸாரத்தில் இருக்கும் நாளில் இல்லை.
இந்த பதிகம் கற்றவர்களுக்கு இந்த துக்கம் ஏற்படும் வாய்ப்பே இல்லை என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply