பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர் * பேயனே எவர்க்கும் இது பேசி என் * ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் * பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
பெருமாள் திருமொழி 3.8
(நிலை நில்லாத போகங்களை விரும்பும்) இந்த உலகத்தார் எல்லோரும் (மேலான புருஷார்த்தத்தை விரும்பும்) எனக்கு பைத்தியக்காரர்களே ; நானும் எல்லோருக்கும் ஒரு பைத்தியக்காரன் தான். இந்த விஷயத்தை விரிவாகப் பேசி என்ன பயன் ? இடையனாய் பூமியில் அவதரித்த கிருஷ்ணனே ! ஸ்ரீ ரங்கநாதனே ! என்று அழைக்கின்றேன்; ஸர்வேஸ்வரன் விஷயத்திலேயே பைத்தியம் பிடித்தவனாக ஆனேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எல்லோரும் விட்டாலும் ஒருவராது பற்றுவார் இல்லையா என்றால், அவர்கள் எல்லோரும் விடும்படி ஆனேன் என்று ஆழ்வார் சொல்கிறார். நிலை நின்ற புருஷார்த்தமான எம்பெருமானை விட்டுவிட்டு, நிலை இல்லாத மற்ற போகங்கள் தன்னை விரும்புபவர்களை, பேயர் என்று விட்டு விட்டேன் என்கிறார்.
ஞானத்தால் தெரிகிற பொருளை பொய் என்று இல்லாதபடி ஆயனாக அவதரித்துத் தன்னை எனக்கு காட்டினான். அப்படி ஞானத்தினால் தெரிகின்ற பொருள் தவிர வேறு ஒன்று உண்டோ என்று பிரமிப்புடன் நின்றதால் தன்னை பித்தன் என்று மற்றவர்கள் விட்டார்கள் என்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply