எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச் * சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் * அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் * பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
பெருமாள் திருமொழி 3.7
எந்த விஷயத்தை அடைவதற்காகவும் எவ்விதமான மனிதர்களோடும் சேர்ந்து நாசம் அடையும் என் மனதை புண்டரீகாக்ஷன் நீக்கி அருளினான்; என்னை நியமிக்கும் ஸ்வாமியே, ஸ்ரீ ரங்கநாதனே, (இதர விஷயங்களில் உள்ள ஈடுபாட்டைத் தவிர்த்த) என் ஸ்வாமிக்கு பித்தன் ஆனேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மற்றவர்களோடு கூடாத நன்மை உமக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்னால் வந்தது அல்ல, ஸ்ர்வேஸ்வரன் அருளியது என்கிறார்.
பாகவதன் அல்லாதவனோடு சேர்த்தியாலே எல்லா மேன்மையும் உண்டாகும் என்று இருந்த என்னை, தன் கண்ணாலே குளிர நோக்கி தன் பிரேமத்தைக் காட்டி பிறரோடு மனது பொருந்தாதபடி செய்தான் என்கிறார்.
எனக்கு ஸ்வாமியானவனே, அந்த ஸ்வாமித்வத்தை நிர்வகித்துக் கொடுப்பதற்காக கோயிலிலே உன் முன்னே வந்து சுலபமானவனே என்று அழைத்தேன் என்கிறார்.
இதர விஷயங்களோடு பொருந்தாமல் உபகாரகனுக்கு பித்தன் ஆனேன் என்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply