எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன் * உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன் * தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர் * எம் பிரானுக்கு எழுமையும் பித்தனே
பெருமாள் திருமொழி 3.6
என்னை போல, அடிமை செய்யதவரோடு நான் கூட மாட்டேன். தேவர்களின் ஐஸ்வர்யங்களை ஒரு பொருளாக நினைக்க மாட்டேன்; நித்யசூரிகளுக்கு நிர்வாஹகராய் கோயிலில் எழுந்தருளி இருக்கிற என்னுடைய ஸ்வாமியான பெரிய பெருமாள் விஷயத்தில் எந்த காலத்திலும் பித்தன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந் நின்ற நேர்மை இனியாமுராமை‘ (திருவிருத்தம் 1) என்றும் ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் ‘ (திருவாய்மொழி 3.3.1) என்றும் அப்படி இல்லாதவர்களோடு சம்பந்தம் இல்லை என்று வாழ்வது என்கிறார். ஸம்ஸாரத்தில் அருசியும் (விருப்பம் இல்லாமையும்) கைங்கர்யத்தில் ருசியும் இல்லையாகில் பிரம்ஹமாதிகள் ஐஸ்வர்யங்கள் என்றாலும் ஏற்றுக் கொள்பவன் இல்லை என்கிறார்.
அயர்வறும் அமரர்கள் அதிபதி (திருவாய்மொழி 1.1.1) நித்ய சூரிகள் எல்லாம் அனுபவிப்பது போல ஸம்ஸாரிகளும் இழக்காதபடி ஸ்ரீரங்கம் கோவிலில் வந்து சுலபம் ஆனவர் என்கிறார். இப்படிபட்ட செயல்கள் எல்லாவற்றிக்கும் பித்தனாகத் திரிபவன் என்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply