திவ்ய பிரபந்தம்

Home

PT 3.4 உண்டியே உடையே

உண்டியே உடையே உகந்து ஓடும் இம் * மண்டலத்தொடும் கூடுவதில்லை யான் * அண்டம் வாழ் நன் அரங்கன் வன் பேய் முலை * உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே

பெருமாள் திருமொழி 3.4

உணவையும் உடையையும் விரும்பித் திரிகிற இந்த உலகத்தவரோடே நான் கூடுவது இல்லை. இந்த அண்டத்தில் உள்ள தேவர்களுக்கு அதிபதியும் வலிய நெஞ்சை உடைய பூதனையின் முலையை (உயிருடன்) உண்ட வாயை உடையவனுமான ரங்கநாதன் விஷயத்தில் பைத்தியம் பிடித்தவனாக இருக்கிறேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வாழ்வதற்கு தேவையான அளவு உணவு, உடை என்று இல்லாமல் எல்லாம் அழிய, மாறி மாறி உணவும் உடையும் என்று இருப்பவர்களோடு நான் கூடுவதில்லை என்கிறார். ‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்‘ (திருவாய்மொழி 6.7.1) என்று இருக்க ஒரு வீபூதி உண்டானது போல், இந்த உலக போகங்களை விரும்புவதற்கு இதே வீபூதி உண்டே என்கிறார்.

அண்டங்களில் வசிக்கும் எல்லாவற்றிற்கும் நிர்வாககனான எம்பெருமான், இந்த விபூதிக்கும் நிர்வாககன். இருந்தும் இங்கே புகுந்து சுலபனாக கோவிலிலே காட்சி அளிக்கிறான்.

இங்கே வந்து அவதரித்து பாவங்களை, தானே போக்குவமனுக்குப் பித்தன் நான் என்கிறார். பெண்கள் விஷயத்தில் பற்று ஏற்பட்டவரை மீட்க முடியாதது போல, அவனுடைய கல்யாண குணங்களில் அகப்பட்டுப் பித்தனான என்னைக் கேவல சரீர சுகங்களில் ஈடுபட்டு உள்ளவர்களோடு சேர விட முடியுமோ என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply