திவ்ய பிரபந்தம்

Home

PT 3.3 மாரனார் வரி

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் * பாரினாரொடும் கூடுவது இல்லை யான் * ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நரக அந்தகன் பித்தனே

பெருமாள் திருமொழி 3.3

மன்மதனுடைய அழகிய கொடிய வில்லுக்கு கட்டுப்பட்டுத் திரியும் இவ்வுலக மக்களோடு தான் கூடுவதில்லை என்கிறார். (முத்தாலான) ஆரத்தை மார்வில் உடையவனாய், ஸ்ரீ ரங்கநாதன் என்னும் திரு நாமத்தை உடையவனாய், அளவிட்டு அறிய முடியாதவனாய், ஜீவாத்மாக்களுக்குச் சிறந்த சேரும் இடமாய், அடியவர்களை நரகத்தில் விழாதபடி காக்கின்றவனான ஸர்வேஸ்வரன் விஷயத்தில் நான் அன்பு பூண்டு உள்ளேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

காமனுடைய (மன்மதன்) பார்வையில் தப்ப முடியாதபடி இருக்கும் கொடியதாக இருக்கிற வில்லுக்குக் குடி மகனாய்த் திரியும் பாரில் உள்ளவர்களோடு நான் கூடுவதில்லை ; பாரிலாரொடுங் கூடுவதில்லையான்
என்னுதல். சார்ங்கமென்னும் வில்லாண்டான் (திருப்பல்லாண்டு 12) தனக்கு ஆட்செய்யுமவன் நான்.

அநந்தன் என்பது, மநுஷ்யத்வே பரத்வம் போலே, திருவரங்கம் வந்து ஸுலபராய்க் கிடக்கும் போதே, முதலும் முடிவும் இல்லாதவனாக இருக்கிறவர் என்று பொருள்.

நன் நாரணன் என்பது, தன் உடைமையை விட மாட்டான் என்பதால், அழுக்கையும் விரும்புமவன் என்று பொருள் கொள்ளலாம்.

நரகாந்தகன் என்பது நரகாஸுரனுக்கு நாஸகன் என்று பொருள் கொள்ளலாம்.

பித்தனே என்று சொன்னது, அவன் தன் வாத்ஸல்யத்தாலே மேல் விழுந்து இருத்தலும், அதே சமயம், விரோதியை போக்கும்படி செய்வதும் ஆகிற
இவனுக்குப் பித்தனே என்று சொல்வதாகும்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply