திவ்ய பிரபந்தம்

Home

PT 3.2 நூலின் நேர்

நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் * ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான் * ஆலியா அழையா அரங்கா வென்று * மால் எழுந்து ஒழிந்தேன் என்றன் மாலுக்கே

பெருமாள் திருமொழி 3.2

நூல் போன்று மெல்லியதான இடையை உடைய பெண்கள் விஷயத்திலே ஈடுபட்டு இருக்கும் இவ்வுலகத்தவர்களோடு தான் கூடுவது இல்லை; (அன்பின் மிகுதியினால்) ஆடி, பெரிய பெருமாள் திருநாமத்தைச் சொல்லி கூப்பிட்டு என்னுடைய திருமாலுக்கே மையல் கொண்டு நின்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தேந தே தம நுவ்ரதா என்று சொன்னதைப் போல் அவன் என் பக்கம் பித்தன் ஆனது கண்டு நானும் அவன் மேல் பித்தேன் ஆனேன் என்கிறார். இது ராமாயணம் அயோத்யா காண்டத்தில் (17.16)ல் வருகிற ஸ்லோகம் ஆகும்.

ஸர்வேஷாம் ஹி ஸ தர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம் * சதுர்ணாம் ஹி வய:ஸ்தாநாம் தேந தே தம நுவ்ரதா:

தர்ம ஸ்வரூபியான அந்த ராமபிரான், நான்கு வர்ணத்தவர்களுக்கும், நான்கு பருவத்தில் இருப்பவர்களுக்கும், மற்றெல்லாருக்கும் அருள் புரிகிறான். ஆகையால் அவர்களும் அவனிடத்திலே அன்பு பூண்டிருக்கிறார்கள்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply