திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் * கடல் விளங்கு கருமேனி யம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உகக்கும் காதல் தன்னால் * குடை விளங்கு விறல் தானைக் கொற்ற வொள் வாள் கூடலர் கோன் கொடை குல சேகரன் சொற் செய்த * நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே
பெருமாள் திருமொழி 1.11
திட்டுகள் விளங்கும்படியான கரையை உடைய காவேரியின் நடுவே திருவரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும் கடல் போல் நிறத்தை உடைய ஸ்ர்வேஸ்வரனை ‘கண்களால் கண்டு அனுபவிக்க வேண்டும்’ என்னும் ஆசையினால் வெண் கொற்றக் குடையுடன் விளங்குமாவராய் வெற்றியை உடைய சேனையையும் வெற்றியுடன் ஒளி பொருந்திய வாளையும் உடையவராய் மதுரைக்கு அதிபதியாய் குறையாத ஔதாரியத்தை உடையவரான குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த நடையால் விளங்குகிற தமிழிலான இப்பத்து பாசுரங்களையும் சொல்ல வல்லவர்கள் ஸமஸ்த கல்யாண குணங்களும் நிரம்பிய பெரிய பெருமாளின் திருவடிக்களின் கீழே இருப்பார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கொடை மாறாமல் கொடுக்கும் குலசேகரபெருமாள் அருளிச் செய்தது என்கிறார்.
உள் அர்த்ததை தேடிப் பார்க்க வேண்டாமல், பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்கவும் வேண்டாதே, கவர்ந்து இழுக்கும் இந்த பத்து பாடல்களையும் அறிந்தவர்கள், லீலாதி குண பூர்ணராய் சர்வ ஸ்வாமியாய் வாத்ஸல்யராய் இருக்கும் பெரியபெருமாள் திருவடிக்களின் கீழே அனுபவிக்க ஆசைப்பட்டார் போல் கிடைக்கப் பெறுவார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply