திவ்ய பிரபந்தம்

Home

PT 1.6 அளி மலர் மேல்

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும் * தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் உந்தித் திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும் * களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக் கண் வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் * ஒளி மதி சேர் திருமுகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக என்று கொலோ உருகும் நாளே

பெருமாள் திருமொழி 1.6

வண்டுகள் மொய்த்துக் கொண்டு இருக்கும் தாமரைப்பூ மேல் உள்ள பிரம்மாவும், சிவனும், இந்திரனோடு கூடிய மற்ற தேவர் குழாமும் ரம்பை முதலான தேவப் பெண்களும் மற்றுமுள்ள (நாராயணனே எல்லாம் என்ற) தெளிந்த ஞானத்தை உடையவர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கித் தள்ளி பார்த்த இடம் எங்கும் தேன் மிகுந்த மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய திருவரங்கத்திலே, திருவனந்தாழ்வான் மீது ஏறி கண் துயிலும் கடல் போன்ற வடிவை உடையவரின் செந்தாமரைக் கண்களையும் குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும் சேவிக்கப் பெற்று என் மனது மிக உருகும் காலம் என்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply