இணை இல்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த * துணியில்லாத் தொன் மறை நூல் தோத்திரத்தால் தொன் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த * மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மதிளரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் * மணிவண்ணன் அம்மானைக் கண்டு கொண்டு என் மலர்சென்னி என்று கொலோ வணங்கும் நாளே
பெருமாள் திருமொழி 1.5
(தங்களுடைய கானத்தினால்) ஆனந்தத்தை அளிக்கும் தும்புரு நாரதர் என்னும் மஹரிஷிகள், ஒப்பற்றதும் இனிமையானதுமான இசையைஉடைய வீணையை மீட்டி, (திருவடிகளிலே விழுந்து) துதிக்க, ஒப்பற்றதாய், மிகப் பழமையான வேத சாஸ்திரங்களாகிற ஸ்தோத்தரங்களாலே நித்யமான திருநாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மா (திருவடிகளிலே) இடைவிடாமல் ஸ்தோத்திரம் பண்ண, இரத்னமயமான மாட மாளிகைகளும் மிகுந்த ஐஸ்வரியத்தை உடைய மதிள் திருவரங்கத்து அரவணையில் பள்ளி கொண்டு அருளும் அழகிய வடிவுடைய ஸர்வேஸ்வரனை, இடைவிடாமல் சேவித்து பூ முடி சூடின என் தலை, அவன் திருவடிகளில் வணங்கும் காலம் என்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அரசாட்சிக்கு ஏற்பப் பூ முடி சூடிக்கிடக்கின்ற என் தலை அவனுடைய திருவடியை முடிசூடப் பெறுதலும் என்றைக்கு கிடைக்குமோ என்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply