பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு, * கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு, * புள் இது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட, * பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் * பேய் முலை உண்டான் குழல் வாராய் அக் காக்காய்.
பெரியாழ்வார் திருமொழி 2.5.4
நீர்த்தாழ்வுகளில் இரை தேடி நிற்கிற கொக்காகிற பறவையின் வடிவத்தை எடுத்துக்கொண்டு வஞ்சனையுடன் வந்த அசுரனை கன்று மேய்த்து விளையாடுகிற தான் பார்த்து இது ஒரு பறவை என்று நினைத்து அதன் வாயை சடக் என்று எளிதாக கிழித்துப் போட்ட பிள்ளைக்கு வந்து குழல் வாராய், பூதனையின் முலையை உண்டவனுடைய குழல் வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் பறவையாய் வந்த பகாசுரனின் வாய் அலகுகளைத் தனது இரு கைகளினாலும் பிடித்து கொண்டு எளிதாக விரிவாகக் கிழித்து அவனை முடித்து விட்டான்.
Leave a comment