திண்ணக் கலத்தில் திரை உறி மேல் வைத்த, * வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும், * அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம், * கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் * கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்.
பெரியாழ்வார் திருமொழி 2.5.3
(கோல்களால் அடித்தாலும் விடுபடாத), கனமான கலத்திலே கயிறுகளால் பின்னப்பட்டுப் பெரியதாய் உள்ள உறியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட வெண்ணையை விழுங்கி விரைவாக ஓடி வந்து உறங்குவான் போல கிடக்கும், ஸர்வ ஸ்வாமியான, நித்ய சூரிகளுக்கு நாதனான, இடையர்களுக்கு கண்ணனானுடைய குழல் வந்து வாராய், நீல மேகம்போன்ற வடிவை உடையவனுடைய குழல் வார வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நன்றாக சேமித்து வைத்த வெண்ணையை, வைத்த குறி அழியாமல், தெய்வம் கொண்டதோ என்று எண்ணும்படி விழுங்கி விரைந்து வந்து ஒன்றும் அறியாதவன் போல உறங்குவான் ; அமரர் பெருமானை என்றது மேன்மையை சொல்கிறது; ஆயர் தம் கண்ணனை என்றது நீர்மையை சொல்கிறது.
உறி மேல் வைத்த வெண்ணையை விழுங்கி, விரைந்து உறங்க சென்று விடும், எம்பெருமானுக்கு, நித்ய சூரிகளுக்கு தலைவனான (அயர்வறும் அமரர்கள் அதிபதி, திருவாய்மொழி 1.1.1) கண்ணனுக்கு குழல் வார வாராய் என்று காக்காவிற்கு அழைப்பு விடுக்கிறார்.
Leave a comment