திவ்ய பிரபந்தம்

Home

PT 4.11 மன்னிய தண்

மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன் * பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி * கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே

பெருமாள் திருமொழி 4.11

(விரோதிகளை) கொல்வதில் தேர்ச்சி பெற்ற கூர்மையான வேலை உடைய குலசேகர ஆழ்வார் மாறாத குளிர்ச்சி உள்ள தாழ்வரைகளை உடைய வட வேங்கடமலையில் எழுந்து அருளி உள்ள எம்பெருமானுடைய பொன் போன்ற சிறந்த சிவந்த திருவடிகளை சேவிப்பதற்கு ஆசைப்பட்டு வணங்கி அருளிச் செய்த பரம்பியதும் இலக்கணத்திற்கு இசைந்ததுமான தமிழ்த் தொடையை கற்று உணர்ந்தவர்கள் (அவன் திருவுள்ளத்திற்கு உகந்த) இனிய பக்தர்கள் ஆவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

எம்பெருமானின் திருவடிகளைக் கண்டவுடன், அவற்றை விட்டுப் பிரிந்து செல்ல மனமின்றி, நகர முடியாதபடி நிலைத்து நிற்கச் செய்கிறது. அந்தத் திருவடிகளின் அழகிலும் இனிமையிலும் ஆன்மா ஆழமாகக் கட்டுண்டு கிடக்கிறது என்கிறார். சம்சாரக் களைப்பையும் துன்பத்தையும் போக்கக்கூடிய எல்லையாக விளங்குவது, தமிழுக்கு எல்லையான திருமலையை உடையவனுடைய பொருத்தமான திருவடிகளைக் காண்பதற்காக என்கிறார்.

காணவேண்டும் என்று பக்தியை உடையராய்த் தலையாலே வணங்கிக் கவி பாடினார் என்று இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply