வாயோர் ஈர் ஐந்நூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ * வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்த தன் கீழ் * காயாம்பூ மலர்ப்பிறங்கல் அன்ன மாலைக் கடி அரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் * மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!
பெருமாள் திருமொழி 1.2
ஸ்தோஸ்திரங்கள் நிறைந்த ஒப்பற்ற ஆயிரம் வாயையும் வெளுத்த திருமேனியை உடையவனாய் (எதிரிகள் அணுமுடியாதபடி) கொதிக்குமவனாய் உள்ள திருவனந்தாழ்வான் இடைவிடாமல் கக்குகின்ற சிவந்த அக்னியானது எம்பெருமானுடைய பூ மாறாத திருமுடிக்கு மேற்கட்டியைப்போல் எல்லாவிடத்திலும் மேலும் மேலும் மிகவும் பரவி நிற்க, அந்த அக்னியின் கீழ் காயாவின் அழகிய பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையைப் போல இருப்பவனாய் ஸ்ர்வேஸ்வரனாய், மதிளை அரணாகவுடைய கோயிலிலே திருவனந்தாழ்வானாகியப் படுக்கையில் கண் வளர்ந்து அருளிகிற அதிசய சேஷ்டிதனை, திருமணத் தூண்கள் இரண்டையும் பற்றி நின்று என் வாயாரத் துதிக்கும் காலம் என்று ஏற்படுமோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
யசோதை பிராட்டிக்கு கிருஷ்ணனை தொடுவதால் வந்த சுகத்தினை வெளிப்படுத்துவதைப் போல, எம்பெருமான் தன் மேல் பட்டதால் வந்த சந்தோஷத்தினை வெளிப்படுத்த ஆயிரம் வாயையும் திறந்து ஸ்தோத்திரங்களை வெளியிடுகிறார்
மணத்தூணே பற்றி நின்று என்பதற்கு பெரிய பெருமாளின் அழகாலே ஏற்பட்ட வெள்ளத்தில் அகப்பட்டு தள்ளிவிடாமல் இருக்க இரண்டு ஸ்தம்பங்களைப் பற்றி நின்று விடுவதாக சொல்கிறார்.
என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே என்பதற்கு கண்டால், கொள்வது வேறு ஒன்றும் இல்லை; ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்கிறார்.
விதானம் போல எங்கும் பரந்திருக்கிற அழல்நாகம், மேன்மேலும் உமிழ்ந்த செந்தீ, அதன் கீழே எங்கும் பரந்த தேஜஸ் என்று யோசிக்கிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடமதுரை திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புருஷோத்ததமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply