திவ்ய பிரபந்தம்

Home

4.10.2 சாமிடத்து என்னைக் குறிக்கொள்

பெரியாழ்வார் திருமொழி 4.10.2

ஸ்ரீ பாஞ்சன்யத்தோடு திருவாழியாழ்வானையும் திருக்கரங்களில் தரித்தவனாய் திருவரங்கத்திலே திருவனந்தாழ்வானாகிற திருப்படுக்கையில் பள்ளி கொண்டு அருளுமவனே, எமகிங்கரர்கள், நாக்கை மிக்க கோபத்தினால் மடித்துக்கொண்டு மஹா பாவியான என்னை அநேக தண்டனைகள் கொடுக்க காத்துக்கொண்டு என்னை இழுத்துக்கொண்டு போகும் போது (இந்த ஆத்மாவின் மனதானது) உன் விஷயத்தில் எத்தனையும் உள் புகாதபடி உன்னைக்கொண்டு மறைப்பதாகின்ற ஒப்பற்ற வஞ்சனையில் சமர்த்தர் நீர் ; ஆதனால் என் கரணங்கள் என் வசமாய் செல்லத்தக்க இந்த காலத்திலேயே சரீரத்தத்தில் இருந்து ஆத்மா பிரியும் போது உன்னை நினைக்க முடியாத என்னை திருவுள்ளம் பற்றி அருள வேண்டும் என்று உன்னை குறித்து சொல்லி வைத்தேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

எம்பெருமானே! எனது உயிர் உடலைவிட்டு நீங்கின பிறகு, யம கிங்கரர் வந்து மிக்க சீற்றங்கொண்டு நாக்கை மடித்துப் பலவகைத் துன்பங்களைச் செய்வதற்காக யம லோகத்திற்கு இழுத்துக் கொண்டு போகும் போது, என் நெஞ்சினால் உன்னை நினைக்க முடியாதபடி, உன்னை என் நெஞ்சுக்கு விஷயமாக்காமல் மறைத்துக் கொள்ளும் படியான மாயச் செயல்களில் நீ வல்லவனாதல், அக்காலத்தில் உன்னை நினைக்கை அரிது என்று, இந்திரியங்கள் கட்டுப்படும் இப்போதே, “இறுதி காலத்தில் அடியேன் நலிவு படா வண்ணம் திருவுள்ளம் பற்றி அருள வேணும்” என்று உன் திருவடிகளில் விண்ணப்பம் செய்து கொள்கிறேன் என்கிறார்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வானையும், ஸ்ரீ பாஞ்சன்னியத்தையும் திருக்கைகளில் அணிந்து கொண்டுள்ளவனே, அரங்கத்து அரவு அணை பள்ளியானே, பல வகைகளால் தண்டிக்கப் படவேண்டியவர்கள் இழுத்துக் கொண்டு போகும் போது, என்னுடைய நெஞ்சமானது, உன் விஷயத்தை சிறிதும் நினைக்க மாட்டாதபடி நீ மாயம் செய்ய வல்லவன் என்பதை அறிந்து இப்போதே விண்ணப்பம் செய்கிறேன் என்கிறார்.

Leave a comment