திவ்ய பிரபந்தம்

Home

2.4.10 கார்மலி மேனி நிறத்து

கார்மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து, வார்மலி கொங்கை யசோதை மஞ்சனமாட்டிய வாற்றை, பார்மலி தொல் புதுவைக்கோன் பட்டர் பிரான் சொன்ன பாடல் சீர்மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே.

பெரியாழ்வார் திருமொழி (2.4.10)

நீர் கொண்டு எழுந்த காள மேகத்தை விட மிகுந்துள்ள திருமேனி நிறத்தை உடைய கண்ண பிரானை, ஆதரித்து கச்சில் அடங்காமல் விம்மும்படியான முலையை உடைய யசோதை நீராட்டின விதத்தை பூமியில் அடங்காத ஏற்றத்தை உடைய பழமையான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளி செய்த லக்ஷணங்கள் அமைந்த, (பகவத் குணங்கள் நிறைந்த), செந்தமிழில் பாடி உள்ள இந்த பாடல்களை ஓத வல்லவர்கள் தீவினை என்று ஒன்றும் இல்லாதவர்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கரிய மேகத்தை விட சிறந்த திருமேனியை உடைய கண்ணனை, யசோதை திருமஞ்சனமாட்டிய விதத்தை, பெரியாழ்வார் பாடிய இந்த பதிகத்தை, உகந்து சொல்பவர்கள், சிறிதும் பாபம் இல்லாதவர்கள் ஆவார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment