திவ்ய பிரபந்தம்

Home

4.10.8 நான் ஏதும் உன் மாயம்

பெரியாழ்வார் திருமொழி 4.10.8

அடியேன் சர்வ சக்த்தனான உன்னுடைய மாயைகளில் யாதொன்றும் அறியேன் ; எம கிங்கரர்கள் பிடித்து இந்த சரீரத்ததோடு நலியத்தக்கதெல்லாம் நலிந்து , பின்பு இந்த சரீரத்தில் உள்ளே புகு என்று அடிக்கும்போது அந்த தருணம் தேவரீரை அடியேன் ஒரு வகையாலும் நினைக்க மாட்டேன் ; பரமபதத்தில் பொருந்தி வர்த்திக்கின்ற நித்திய முக்தர்களுக்கு தலைவனாய் திருமதுராவில் அவதரித்து அருளினை மிக்க ஆச்சரிய சக்தி உடையவனாய் எனக்கு, பாகன் வசப்பட்ட யானை போல் ஆனாய் ; அரங்கத் தரவணைப் பள்ளியானே , சர்வ ரக்ஷிக்கனான நீ என்னை காக்க வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

போமிடத்து உன்திறத்து எத்த னையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை என்று பெரியாழ்வார் திருமொழி 4.10.2 என்று சொன்னவர் ஆயிற்றே.

ஊனே புகே யென்று மோதும் போது என்று சொல்லும் போது, இனி புகப்போகின்ற சரீரம் இன்னும் கொடுமையுடன் இருக்கும் என்பதை சொல்கிறார் .

ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை(பெரியாழ்வார் திருமொழி 1.7.11)ல் சொல்லயவர் ஆயிற்றே. மீண்டும் மதுரைப் பிறந்த மாமாயனே என்று சொல்கிறார் .

பரமபதத்தில் இருக்கும் நித்யசூரிகளுக்கும் முக்தர்களுக்கும் தலைவனே, திருவடமதுரையில் அவதரித்து, ஆச்சரியங்கள் கொண்டவனே, யானை பாகனுக்கு வசப்படும் யானையை போல, எனக்கு வசப்படுபவனே, அரங்கத்து அரவு அணைப்பள்ளியானே, நான் உன் மாயைகளில் ஒன்றையும் அறிய மாட்டேன், யமகிங்கரர்கள் என்னை பிடித்து இந்த சரீரத்திற்கு கொடுக்க வேண்டிய துன்பங்களை கொடுத்து, நரகத்தில் அனுபவிக்க வேண்டிய கொடுமைகளுக்கு உரிய யாத்நா சரீரத்திற்கு அனுப்பும் போது உன்னை நான் நினைக்க மாட்டேன், நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

Leave a comment