திவ்ய பிரபந்தம்

Home

4.2.2 வல்லாளன் தோளும்

பெரியாழ்வார் திருமொழி 4.2.2

மங்களாசாசன சப்தம் ஆனது, எல்லா இடங்களிலும் திருமலையின் பரப்பு எங்கும் பரவி, செல்லும் பெருமையை உடைய தென் திருமாலிருஞ்சோலை ; வலிய ஆண்பிள்ளைத் தனத்தை உடையவனாய் சிவனிடம் இருந்து பெற்ற வாளை உடையவனான இராவணனுடைய தோள்களும் தலைகளையும் அவன் தங்கையான சூர்ப்பணகையின் பொல்லாத மூக்கினையும் அறுத்து போட்டவன் நித்ய வாசம் பண்ணுகிற திருமலை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வல்லாளன் என்று சொன்னது பாணாஸுரனைச் சொல்வது. அவனது ஆயிரம் தோள்களையும், ராவணனது பத்து தலைகளையும் சூர்ப்பணகையின் மூக்கினையும் போக்குவித்தான் என்று சொல்வது உண்டு. தென் திருமலையில் ஓரிடம் தவறாமல் எங்கும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்ற மங்களாசாஸந கோஷமே இருக்கும் படி மிக உயரமாக உள்ளது என்கிறார்.

எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி என்று சொல்வது எல்லோரும் பல்லாண்டு பாடுகிறார்கள். இங்கு எல்லோரும் என்று சொல்வது பிரதிபலன் பார்த்து வந்தவர்களையும் சேர்த்து என்றால், அவர்களுக்கு பல்லாண்டு பாடுவார்களா என்று கேட்டு, இந்த நிலத்தை மிதித்ததால் வந்த பலன் என்கிறார்.

Leave a comment