திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.4.11 தேனை நன் பாலை

திருவாய்மொழி 8.4.11

தேனை, பாலை, கருப்பஞ்சாற்றினை, அமுதினை, திருந்திய உலகினைப் புசித்த அம்மானை, வானிலே இருக்கிற பிரமனை, மலர்ந்த குளிர்ந்த திரு நாபிக் கமலத்திலே படைத்த மாயோனை, தலைவனை, வளப்பம் பொருந்திய திருக்குருகூரிலே அவதரித்த உதாரரான ஸ்ரீ சடகோபாராலே அருளிச் செய்யப்பட்ட ஆயிரத்துள் இந்தபத்தும் பரமபதத்திற்கு கொண்டு சென்று கைங்கரியமாகிற பகவானுடைய திருவருளைக் கொடுத்து மகா வஞ்சனை பொருந்திய பிறப்பாகிய கூத்தினை அறுக்கும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. வானின் மீது என்ற இடத்தில் நிலமிசை நீடு வாழ்வார் என்ற குறளை நினவு கொள்க. இந்த பதிகத்தைப் கற்றவர்களுக்கு இது தானே முதலிலே பரமபதத்திற்கு ஏறக் கொடுபோய், பின்பு ஸம்ஸாரமாகிற மகா நாடகத்தினை அறுக்கும் என்கிறார்.

தேனை, பாலை, கருப்பஞ்சாற்றினை, அமுதினை என்பவை இவர் அச்சம் கொள்வதற்கான காரணங்கள் என்று சொல்கிறார். தனக்கு சர்வ ரஸ எனப்படும் அவனின் இனிமையை கண்டு அச்சம் கொள்கிறார். பிறகு அச்சம் நீங்கியதற்கான காரணத்தை, தனக்கு கட்டளைப் பட்ட உலகத்தை பிரளய காலத்தில் தன் திருவயிற்றில் வைத்து காத்ததை சொல்கிறார். வானிலே இருக்கிற பிரமனை படைப்பிற்கு தகுதியாக செவ்வியான திரு நாபிக் கமலத்தில் படைத்த ஆச்சரியமாணவனைச் சொல்கிறார். ஆபத்திற்கு துணைவனாய், அழிந்தவற்றை உண்டாக்க வல்லவனாய், சம்பந்தத்தை உடையவனாய், இருக்குமவன் என்கிறார்.

Leave a comment