திவ்ய பிரபந்தம்

Home

TVM 8.4.8 திகழ் என் சிந்தை

திருவாய்மொழி 8.4.8

என் மனதிற்குள்ளே விளங்க இருந்தவனை, நான்கு வேதங்களிலும் வல்லவர்களும் பூ தேவர்களுமாகிய ஸ்ரீ வைஷ்ணவர்கள் திசை நோக்கிக் கை கூப்பி துதிக்கும்படியாகத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறங்கரையில் எழுந்து அருளி இருக்கின்றவனை ஒளியைக் கொண்ட தேவர்களுக்கு புகலிடமாய் இருப்பவனை வலிய கையை உடையவரான அசுரர்கட்கு கொடிய யமனாவனை பொருந்திய மூன்று உலகங்களையும் படியத்து அழித்து காப்பாற்றுகின்றவனை புகழுமாற்றை அறியேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. காப்பவனை புகழுமாறு அறியேன். இப்படி நிறைவாக அனுபவித்த சீறி கொள் சிற்றாயனுடைய விலக்ஷணமான குணங்களிலும் அழகிலும் அழுந்தி அவனைப் புகழும்படி அறிகின்றிலேன் என்கிறார்.

திகழ் என் சிந்தையுள் இருந்தானை என்று சொன்னது, இதுவும் இவர்க்கு அச்சம் நீங்குவதற்கு காரணம் என்கிறார். தம் நெஞ்சிலே இருக்கையாலே ஒரு அரணுக்குள்ளே இருக்கிறாப் போல் இருக்கிறது என்கிறார். உகவாதார்க்கு கிட்டமுடியாதபடி அரணான ஊரில் நிற்கிறபடியைச் சொல்கிறது.

புகர்கொள் வானவர்கள் புகலிடந் தன்னை என்று சொன்னது, அவனிடம் வந்த ஒளி உடையவரான பிரமன் முதலானவர்களுக்கும் ஆபத்து வந்தால் புகலிடமாய் உள்ளவனை என்பது.

அவனுக்கு ஒரு குறையும் இல்லை; என் குறை தீரப் புகழ்வது ஒன்றும் அறிகின்றிலேன்; தனக்கு வசபட்டு இருக்கின்ற எல்லா உலகத்தின் படைத்தல் முதலானவற்றை செய்பவன் என்று சொல்கிறார். சொல்ல ஆரம்பித்தால் சொல்லி முடிக்க முடியாது என்கிறார்.

Leave a comment