தான நகர்கள் தலை சிறந்து எங்கெங்கும், * வானின் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே, * ஆன விடத்து என் நெஞ்சும் திருக்கடித் * தான நகரும், தனதாயப் பதியே.
திருவாய்மொழி 8.6.8
பரமபதம் என்ன, இந்த உலகம் என்ன, திருப்பாற்கடல் என்ன, ஆகிய எல்லா இடங்களிலும் மேன்மை பெற்று விளங்குகிற தலங்கள் முழுவதும் எம் மாயவனுக்கே வசிக்கும் நகரங்கள் ஆனாலும் கூட என்னுடைய மனமும் திருக்கடித்தான நகரும் தன்னுடைய தாயம் (முறையாக வந்த) பதிகளாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அவனுக்கு வேறுபட்ட சிறப்பினை உடைய நகரங்கள் பலவும் இருந்த போதும், என்னுடைய நெஞ்சத்தையும் திருக்கடித்தானத்தையும் தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி இருக்கிறான் என்று கூறுகிறார்.
Leave a comment