பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் * கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் * அங் குயிலே உனக்கென்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஓண் தண்டும் * தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி
நாச்சியார் திருமொழி 5.7
Leave a comment