திவ்ய பிரபந்தம்

Home

NT 4.11 ஊடல் கூடல்

நாச்சியார் திருமொழி 4.11

ஊடலோடு கூடி இருப்பது என்ன, குற்றங்களை உணர்த்துவது என்ன, பிறகு சேர்வது என்ன, இப்படிபட்ட காரியங்களில் நெடும் காலமாக நீடித்து பொருந்தி நின்ற நிறைந்த புகழை உடைய ஆச்சியர், இழைத்த கூடலை பற்றி, அழகிய முடியை உடைய ஆண்டாள், அருளி செய்த பத்து பாட்டுக்களையும் ஓத வல்லவர்களுக்கு, எம்பெருமானை பிரிந்து துன்பப் படும் பாவங்கள் இல்லை என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறாள்.

இந்த பதிகத்தை படிக்க வல்லவர்களுக்கான பலன் இங்கே சொல்லப்பட்டு உள்ளது.

எங்கள் காதலை பிரிந்து நீ நலிந்தாய் என்று அவர்கள் சொல்ல, உங்கள் காதலை வளர்க்கவே பிரிந்தேன் என்று அவன் சொல்லி, இவர்களும் மீண்டும் சேர்வது என்கிறாள்.

இந்த ஆச்சியர்களுக்கு நிரை புகழ் ஆவது, ஒருத்தி, இவனுக்கு முகம் கொடுக்காமல், இவனை பத்து நாள் பட்டினி போடுவது என்றும், இன்னொருத்தி நான்கு நாள் பட்டினி போடுவது என்றும் சொல்வதே ஆகும் என்று எம்பார் அருளி செய்வார்.

இவள் தன் குழல் அழகால் அவனை கூடல் இழைக்கும்படி செய்ய வல்லவளாய் இருக்க, அவளை குறித்து கூடல் இழைத்த பாசுரம் இது.

Leave a comment