திவ்ய பிரபந்தம்

Home

NT 4.7 அன்றுஇன்னாதன

நாச்சியார் திருமொழி 4.7

முற்காலத்தில் வெறுக்க கூடிய காரியங்களை செய்து வந்த சிசுபாலனும், வழி இடையே நின்ற இரட்டை மருத மரங்களும், ஏழு ரிஷபங்களும், பகாசுரனும், வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுதம் என்ன, பலம் என்ன, இவற்றை உடையவனான கம்ஸனும் விழுந்து விடும் படியாக எல்லார் கண் எதிரிலும் கொன்று ஒழித்த கண்ணன் வரக்கூடுமாகில், கூடலே நீ கூடிடு என்பது இதன் பொழிப்புரை.

விரோதிகள் அனைவரும் அழித்த கண்ணன், வரும்படி, கூடலே நீ கூடிடு என்கிறாள்.

அன்று இன்னாதன செய் சிசு பாலனும்

அன்று ருக்மணி ஸ்வயம்வரத்திற்கு தடையாய் பல தகாத செயல்கள் செய்த சிசுபாலனால் விளந்த தடைகள் விலகியது போல, கூடாமல் இருக்கும் தடைகள் விலக வேண்டும் நீங்க வேண்டும் என்பது கருத்து.

தடையாய் இருந்த அனைவரையும் அழித்து என்னை அடையவேண்டும் என்று சித்தமாக இருக்கிறான் என்றும், நீ கூடிவிட்டால் காரியம் நடந்து விடும் என்று கூறி முடிக்கிறாள்.

Leave a comment