திவ்ய பிரபந்தம்

Home

NT 3.4 பரக்க விழித்து

நாச்சியார் திருமொழி 3.4

‘இலங்கை அழித்த பிரானே, பலர் படிந்து நீராடும் இப்பொய்கையின் கரையில், நாற்புறத்திலும் நன்றாக விழித்து, நோக்கி, கண்ணீர் தாரைகள், அடங்கினாலும், நிற்க மாட்டாத தளும்புகின்றதை உற்று நோக்குகின்ற, கொஞ்சம் கூட தயவு இல்லாதவனே, நீ மரம் ஏறுவதிலே வல்லவர்களுக்கு தலைவன் என்பதை உணர்ந்து கொண்டோம்’, என்கிறார்கள். குருந்த மரத்தின் மேல் உள்ள எங்கள் ஆடைகளை கொடுத்து அருள வேண்டும் என்கிறார்கள். 

இவர்கள் இப்படி மாறி மாறி பேசுகொண்டு இருப்பதை கண்ட கண்ணன் இவர்களை பயமுறுத்த சில காரியங்கள் செய்தான்; தங்கள் வாதங்கள் எதுவும் அவனிடம் செல்ல வில்லை என்பதால் அவனை இரங்க சொல்லி பிரார்த்திகிறார்கள்.

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்து ஆடும் சுனையில், அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய்

அங்கும் இங்கும் அரக்க பரக்க விழித்து யாரோ வருவது போல கண்ணன் பயந்தது போல நடிக்க, பிற ஆண்களும் இந்த பொய்கைகக்கு வந்து நீராட கூடும் என்பதால், இவர்கள் பயந்து கண்களில் நீர் பெருகுவதை இரக்கம் இல்லாமல் இருக்கிறாயே என்று சொல்கிறார்கள்.

இரக்க மேல் ஓன்றும் இலாதாய் இலங்கை யழித்த பிரானே

சீதா பிராட்டிக்காக இலங்கையை அழித்து ஒரு சமயம் இரக்கத்தன்மை உள்ளவன் என்றும் இப்போது இரக்கத்தன்மை இல்லாதவன் போல இருக்கிறான் என்றும் கூறுகிறார்கள். எங்கள் மேல் இரக்கம் கொண்டு எங்கள் துகில்களை கொடுத்து அருள் என்கிறார்கள்.

குரக்கரசாவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்

இவன் துகில்களை இன்னும் உயரத்தில் வைத்து விட்டு, நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என்று சொன்னான். மரம் ஏறுவதில் வல்லவனான நீயே வஸ்திரங்களை எடுத்து தர வேண்டும் என்கிறார்கள்.

எம்பெருமான் உபாயம் ஆவானே தவிர வேறு ஒன்றும் உபாயம் ஆகாது என்றும் அடியவர்களின் முயற்சி உபாயம் அன்று என்றும் சொல்வது உள்ளார்த்தம் ஆகும்.

Leave a comment