காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக் * கட்டி அரிசியை அவல் அமைத்து* வாயுடை மறையவர் மந்திரத்தால் * மன்மதனே உன்னை வணங்குகின்றேன் * தேய முன் அளந்தவன் திரிவிக்கிரமன் * திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் * சாயுடை வயிறும் என் தட முலையும் * தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே
நாச்சியார் திருமொழி 1.7
மன்மதனே, பால்மாறாத பசுங்காய் நெல்லும், கரும்பும் படைத்து, அத்தோடு, கருப்புக்கட்டியும், பச்சரிசியும், அவலும் சமைத்து நல்ல ஸ்வரத்தை உடையவராய், காம சாஸ்திரத்தில் வல்லவர்களுடைய மந்திரத்தாலே, என் பிள்ளையான உன்னை, வணங்குகிறேன். முன்பு மூன்று உலகங்களையும் அபகரித்த போது, எல்லா உலகங்களையும் தனுடைய திருவடிகளால் அளந்தவனாய், திரிவிக்ரம அவதாரம் செய்து அருளிய தன் திருகைக்களினால் என்னை தீண்டும் வண்ணம், ஒளியை உடைத்தான வயிறும் மார்த்தவமும் உடைத்தாய் பருத்து இருந்துள்ள முலைகளும் உலகத்தில் நிலை நின்ற புகழை அடைய செய்ய வேண்டும் என்கிற பாசுரம்.
திரிவிக்ரமன் தன் திருக்கைகளால் என்னை தொடும்படியான பெரும் புகழை தர வேண்டும் என்கிறாள்.
அளந்தவன் திரிவிக்ரமன் என்று சொன்னது, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எந்த ஒரு வித்தியாசமும் பாராமல் தன்னுடைய திருவடிகளால் தீண்டியவன் என்று சொல்கிறார்.
Leave a comment