திவ்ய பிரபந்தம்

Home

5.3.10 சென்று உலகம் குடைந்தாடும்

பெரியாழ்வார் திருமொழி 5.3.10

இந்த பதிகத்தை பாட வல்லவர்கள் எம்பெருமானுக்கு சேஷபூதர் ஆவார்கள் என்று பலன் சொல்லி, இந்த பதிகத்தை முடிக்கிறார்.

பொன்னால் செய்து விளங்குகின்ற மாடங்களாலே நிறைந்து தோன்றுகிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு தலைவர் ஆனா பெரியாழ்வார் உலகத்தார் எல்லோரும் ஆழ இழிந்து நீராடுகின்ற சுனைகளாலே சூழப்பட்ட தெற்கு திருமலையில் (திருமாலருஞ்ச்சொல்லை ) எழுந்தருளி இருக்கிற உபகாரகனுடைய திருவடிகளில் அடிமை விஷயமாக அடவு பட்டிருக்கும்படி அருளிச் செய்த பத்து பாட்டுக்களையும் பாட வல்லவர்கள் மூன்று லோகங்களையும் அளந்து கொண்டவனுக்கு அடியாராய் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

இந்த உலகத்தில் ஞானம் இல்லாதவர்கள், விசேஷ ஞானம் உள்ளவர்கள், நன்மை செய்பவர் , தீமை செய்பவர் என்று வித்யாசம் எதுவும் பார்க்காமல் ஆழ இழிந்து இருக்குப்படியான சுனைகள் சூழ்ந்த திருமலையில் அருளிய உபகாரகன் என்கிறார் . சமாரிகள் போனால் தனக்காக வந்து இருக்கிறார்கள் என்று விருப்பப்பட்டவைகளை நிறைவேற்றும் எம்பெருமான் போல், இந்த சுனைகளும் நினைத்து இருக்கும் என்கிறார்.

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை என்று சொல்வது ஆழ்வார் அருளிச் செய்த ‘பொன்னுலகு‘ (திருவாய்மொழி 6.8.1) என்ற பரமபதம் போல் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ்வார் எழுந்தருளி இருக்கிற தேசம் என்கிறார். ‘வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்‘ (திருவாய்மொழி 5.3.11) ல் சொல்லியபடி ஆகும்.

இந்த பதிகம் சொல்வதால் / பாடுவதால் பலன் ஸ்வதந்திரியமும் அன்ய சேஷத்வமும் குலையும் என்கிறார். இவை இரண்டும் குலைந்ததை காட்டிய அவதாரமே திருஉலகுஅளந்தவன். பெரியாழ்வார் திருமொழி (4.7.3) ல் அருளிய சதுமுகன் கையில், மற்றும் பெரிய திருமொழி (5.8.9)ல் அருளிய ‘ உலகளந்த பொன்னடியே‘, என்றும், மூன்றாம் திருவந்தாதி (23)ல் அருளிய ‘விரும்பி விண் மண்ணளந்த …. பொன்னங் கழற்கே‘, என்றும் பொது நின்ற பொன்னங் கழலே‘ (மூன்றாம் திருவந்தாதி 88)ல் அருளியதும் ஸ்வரூப, ரூப, சாதன இம்மூன்று புருஷார்த்தங்களும் இந்த திருவடிகளில் என்று சொல்லி முடிக்கிறார் .

நமது கைங்கரியங்களை எம்பெருமான் உடனிருந்து ஏற்று கொள்ள வேண்டும் ’ என்ற விருப்பத்தினால், “அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய்” என்று சொல்லப்பட்டது.

Leave a comment