திவ்ய பிரபந்தம்

Home

5.2.5 மாணிக் குறள் உருவாய

பெரியாழ்வார் திருமொழி 5.2.5

அழகு மிக்க இருந்துள்ள வாமன அவதாரம் செய்து அருளிய மாணிக்கங்களுக்கு இருப்பிடமான ஆச்சர்யமானவனை , விரும்பி கொண்டு வந்து என் நெஞ்சினுள்ளே புகும்படி பிரிவில்லாமல் நிலை நுர்த்திக் கொண்டேன் பாருங்கள் . மிகவும் வலிதான் மூளைப்படி நடந்து கொள்ளும் இந்திரியங்களே, நீங்கள் பிழைக்க நினைத்தீர்கள் ஆனால் தாமதிக்காமல் பின்வாங்கி செல்லுங்கள், இந்த ஆத்மாவும் தேகமும் பழையது அன்று, எம்பெருமானால் காக்கப்பட்டது என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

வாமன அவதாரம் மூலம் தேவ காரியம் செய்ய வந்தது போல, என் காரியம் செய்ய வந்தார் என்கிறார். நமுச்சி, சுக்ராச்சாரியார் போன்றவர்கள் பட்டது போல, இந்திரியங்களும் படவேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறார்.

தேவேந்திரனுடைய வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டுக் குறட் பிரம்மசாரியாய் மாவலியிடம் வரம் வாங்கி, அதன் மூலம் அவன் மூன்றடி நிலம் வாங்கி, ஓங்கி உலகளக்கும் போது, எல்லோர் தலைகளிலும் திருவடியை வைத்து அருளின பரம காருணிகனும், தனது எல்லையற்ற கிருபையினால் அன்றிப் பெறுவதற்கு அரியனும், மாயச் செயல்களில் வல்லவனுமான எம்பெருமானை நான் இன்று எனது ஹ்ருதயத்தில் நிலை நிறுத்தினேன் ஆதலால், பொல்லாத இந்திரியங்களே! இனி நீங்கள் இங்கு இருக்க வேண்டியதில்லை என்கிறார்.

இந்திரியங்கள் உயிர் ஆற்றவை ஆனாலும், கொடுமை புரிவதில் உயிர் உள்ளவைகள் செய்வதைவிட அதிகம் செய்வதால், அவற்றை “குறும்பர்களுள்ளீர்” என உயர்திணையாகக் கூறினார். இந்திரியங்களை வேறிடம் தேடி ஓடச் சொன்னது, உங்கள் தொழில்களை இங்கு செய்யாது ஓழியுங்கள் என்று கூறுவதாகும். எம்பெருமான் எனது நெஞ்சில் வந்து குடி கொண்டவுடனே நீங்கள் ஓடிப் போக வேண்டியது நிர்பந்தம் ; அப்படி இல்லாமல் இன்னும் ஓடாதிருந்தீர்களாகில் என்ன ஆகும் என்பதை சொல்லாமல் சொல்கிறார். ‘உண்ணிலாவிய ஐவரால்” (திருவாய்மொழி 7.1.1) என்ற பாடலும் ”கோவாய் ஐவரென் மெய்குடியேறி’ (பெரிய திருமொழி 7.7.9) என்ற பாடலும் மேற்கோள் சொல்லப்பட்டு இவர்கள் எதிரே இந்திரியங்கள் குடியிருப்பதை சொல்கிறார்.

மாணி என்பது அழகு என்றும், ‘பிரமசாரி’ என்றும் பொருள்படும். இரண்டு பொருளாகத் தோன்றாமல், ஒரே பொருளாக தெரியும்படி எம்பெருமானை மாணிக்க பண்டாரம் என்கிறார்.  உலகளந்த மாணிக்கமே! என்று திருவிருத்தம் (85)ம் பாடலில் சுவாமி நம்மாழ்வார் அருளியதையும் இங்கே நினைவில் கொள்ளலாம் .

Leave a comment