திவ்ய பிரபந்தம்

Home

4.10.9 குன்றெடுத்து ஆநிரை காத்த

பெரியாழ்வார் திருமொழி 4.10.9

கோவர்த்தன பர்வதத்தை குடையாக எடுத்து பசுக்களின் கூட்டத்தினை ரக்ஷித்து அருளின ஆயனாய், பசு நிரையை மேய்த்தவனாய், எனக்கு சுவாமி ஆனவனாய், அரங்கத்தரவணை பள்ளியானே ; உனக்கு பல்லாண்டு பாடுமவனாக்கி கொண்ட நாள் முதல் தொடங்கி , இன்றளவாக சர்வ காரண பூதனான உன்னுடைய தெளிவான தேஜஸ்ஸை உடைய திவ்ய மங்கள விக்ரகத்தை ஒரு காலும் மறந்தது இல்லை ; மிகவும் கொடியரான எம கிங்கரர்கள் என்னை இம்சித்து பலத்கரித்து பிடிக்கும்காலமான அந்த தருணம் நீ என்னை காக்க வேண்டும் எனபது இந்த பாடலின் பொழிப்புரை.

கோநிரை மேய்த்தவனே என்று சொன்னது ஆநிரை கூட்டத்தையும் ஆயர்களையும் காப்பாற்றியதைச் சொல்லியது. ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்  அரங்கமா நகரமர்ந் தானே (பெரிய திருமொழி 5.7.9) ல் சொல்லியபடி இங்கும் ஆயன் அரங்கத்தில் அமர்ந்தான். கோநிரை மேய்த்தவனே என்று சொன்னது , ஆபத்து காலத்தில் மட்டும் இல்லாது அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு ஈடாக அல்லாத இடையர் போல் கையில் கோல் எடுத்து கோநிரை காத்தவனே என்கிறார் .

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு வத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே‘ என்று சுவாமி நம்மாழ்வார் திருவாய்மொழி (10.3.10)ல் சொல்லியபடி பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் பசு நிரை மேய்ப்பதையே உகந்தது என்று அவதரித்ததன்றோ.

அன்று முதல் என்று சொன்னது பொய்கையாழ்வார் (முதல் திருவந்தாதி 1.6)ல் கூறிய “அன்று கருவரங்கத்துட் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்கமேயான் திசை” என்று சொல்லியபடியே ஆகும் .

கோவர்தன மலையை எடுத்து பசுகூட்டங்களை காப்பாற்றியவனே, மாடுகளின் கூட்டத்தை மேய்த்து அருளினவனே, எனக்கு தலைவனே, அரங்கத்து அரவு பள்ளியானே, அந்நாள் தொடங்கி, இன்றளவும் சர்வ காரணமான உன்னை, மறந்ததில்லை, யமகிங்கரர்கள் என்னை பிடித்து வருத்தும் போது காக்க வேண்டும் என்கிறார்.

Leave a comment