திவ்ய பிரபந்தம்

Home

4.9.9 தேவுடைய மீனமாய் ஆமையாய்

பெரியாழ்வார் திருமொழி 4.9.9

சேவலுடன் பெண் அன்னம் செந்தாமரைப் பூவின் மேல் ஏறி இருந்து அத்தை அசைத்து ஊசலாடி புஷ்பா சயனத்தின் மேல் ஒன்றுக்கொன்று பிணங்கி அதனால் சுண்ணமாகிற சிவந்த பொடியில் மூழ்கி விளையாடும் நீர் வளத்தை உடைய திருவரங்கம் ஆனது, தேஜஸ் உடைய மத்ஸ்யமாகவும், கூர்மமாகவும், வராகமாகவும், நரசிம்மமாகவும், வாமனனாகவும், பரசுராமனாகவும், ஸ்ரீ ராமனாகவும், பலராமனாகவும், ஸ்ரீ கிருஷ்ணனாகவும், கல்கியாயும் அவதரித்து அசுரர் ராக்ஷஸர்களையும் முடித்த எம்பெருமானுக்கு வாசஸ்தலம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

எம்பெருமானது தசாவதாரங்களை முதலில் கூறுகிறார். “தேவுடைய” என்பது அடைமொழி, ஒளி பொருந்திய என்ற பொருளில் வரும். மனிதர்களின் பிறப்பு கர்மம் அடிப்படையில் இருப்பதால் பிறக்கப்பிறக்க ஒளி குறைந்து வரும் ; ஆனால் எம்பெருமான் அவதாரங்கள், ‘நிலை வரம்பு இல பல பிறப்பாய், ஒளி வரும் முழு நலம்‘ (திருவாய்மொழி 1.3.2) சொல்லியது போல் பிறக்கப் பிறக்க ஒளி கூடி வரும் என்கிறார்.

  • வானோரளவும் முது முந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில், மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்,’ (பெரிய திருமொழி 8.8.1) என்று மத்ஸ்ய அவதாரமாகவும்,
  • தேவ காரியமாக அமிர்தம் எடுக்கும் சமயம், மந்தரபர்வதத்தை மத்தாகக் கொண்டு கடைந்த போது, ஆதாரமான கூர்ம அவதாரமாகவும்,
  • அணடபித்திலே சேர்ந்த பூமியை பிரித்து எடுத்த வராக அவதாமாகவும்,
  • தேவவரம் கொண்டு அதனால் பலம் பெற்ற ஹிரண்யனை வதம் செய்த நரசிம்ம அவதாரமாகவும்,
  • மஹாபலியால் அபகரிக்கப்பட்ட ராஜ்யத்தை இந்திரனுக்கு பெற்றுக்கொடுத்த வாமன அவதாரமாகவும் ,
  • மூவர் உருவினில் ராமனாய் என்பதற்கு, துஷ்ட க்ஷத்ரியரை ஒழிப்பதற்கான பரசுராம அவதாரமும், ராவணாதி ராக்ஷஸரை ஒழிப்பதற்கான ஸ்ரீராம அவதாரமும், ஆஸுர ப்ரக்ருதிகளான க்ஷத்ரியாதிகளை ஒழிப்பதற்கான பலராம அவதாரமும் ஆகிய மூன்று அவதாரங்கள். முன்னும் பின்னும் உள்ளவை கெளணம் ஆவேச அவதாரங்கள். இருந்தும் இங்கே சொல்ல காரணம், அவை தசாவதாரங்களில் உள்ளன மற்றும் அந்த அவதாரங்களிலும் விரோதிகளை அழித்ததனை ஆழ்வார் நமக்கு சொல்வதற்காகவும் தான். ‘மன்னடங்க மழுவலங்கைக் கொண்ட இராமநம்பீ’ (பெரியாழ்வார் திருமொழி 5.4.6) என்றும் ; ”உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழியாமல் எல்லாம்‘ என்றும் சொன்னவர் அல்லவோ இந்த ஆழ்வார். நடுவில் உள்ள இராமனே முழுமையான அவதாரமாகவும்,
  • பூமி பாரத்தை காக்க கிருஷ்ணா அவதாரமாகவும்
  • தரும நெறிமுறைகள் நிலை குலைந்து, பாவமே வெல்லுகின்ற காலமாகிய கலியுக முடிவில், எம்பெருமான் கல்கி என்ற குதிரை வடிவமான அவதாரமாக எடுத்து, தருமநெறி முதலியவற்றை நிலைநிறுத்தி, அருள போகிற அவதாரமாகவும்

உள்ள தசாவதாரங்களை சொல்கிறார் .

இப்படி எல்லா அவதாரங்களிலும் கெட்டவர்களை சம்ஹரித்த விசேஷங்களை கூறுகிறார்.

Leave a comment