திவ்ய பிரபந்தம்

Home

4.9.4 பதினாறாமாயிரவர் தேவிமார்

பெரியாழ்வார் திருமொழி 4.9.4

திருத்துவாரகை என்கிற திருப்படை வீட்டிலே கோப கன்னிகைகளான பதினாயிரம் தேவிமார்கள் நித்ய கைங்கரியம் செய்ய அவர்களுக்கு நாயகராய்க் கொண்டு தன் பெருமை தோற்ற எழுந்தருளி இருந்த மணவாளரானவர் (அழகிய மணவாள பெருமாளைக் கொண்டு ) நித்திய வாசம் செய்கிற கோவிலாவது ; அப்போது அலர்ந்த செவ்வி குறையாத தாமரைப் பூவானது எம்பெருமானுடைய பொன்மயமான திரு நாபியில் உள்ள பூவையே போன்று இருக்கைகாக சர்வ நிர்வாகத்தை நினைத்து அதனால் கர்வித்து , மற்றுமுண்டான தாமரைகளின் அழகை தள்ளிவிட நின்றுள்ள நீர் வளப்பத்தை உடைய திருவரங்கம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

திருவரங்கமா நகரைச் சுற்றி சூழ்ந்துள்ள காவேரியில், எம்பெருமானது திருநாபிக் கமலம் போன்ற பல தாமரை மலர்கள் ஓங்கி விளங்குகின்றன என்றும், அந்த பூக்களோடு ஓத்த அழகிய பூக்கள், மற்றோர் இடத்திலும் இல்லை என்றும் கூறுகின்றார்.

திருத்துவாரகை என்ற திருத்தலத்தில் பதினாயிரம் தேவிகள் கைங்கர்யம் செய்ய, அவர்களுக்கு நடுவே நாயகமாக வீற்று இருக்கும் அழகிய மணவாள பிள்ளையாகிய எம்பெருமான் நித்ய வாசம் செய்வது திருவரங்கம் ஆகும் என்கிறார். நரகாசுரன் திரட்டி வைத்து இருந்த பதினாயிரம் நாக கன்னிகைகள், அவனை அழித்த பிறகு, அங்கிருந்து திருத்துவாரகைக்கு எழுந்தருளியத்தைச் சொல்கிறார் .

Leave a comment