திவ்ய பிரபந்தம்

Home

4.9.3 கருளுடைய பொழில் மருதும்

பெரியாழ்வார் திருமொழி 4.9.3

உள்ளத்தில் ‘இவனை நலிய செய்ய வேண்டும் ‘ என்ற சீற்றத்தை உடைய (பார்த்தவர்கள் மதி மயங்கும்படி ) புறம்பில் சோலை செய்து நிற்கிற இரட்டை மருத மரங்களையும், மிக்க கோபத்தால் எதிர்த்து வந்த குவலயாபீடத்தையும், பிரலம்பாசுரனையும் , மஹா கொடுமையான கேசி என்கிற அசுரனையும், சாணூர முஷ்டிகர்களாகிற மலர்களையும் சின்னா பின்னம் ஆக்கி, அவற்றை அழித்த விதங்களை அறியுடையார் ஸ்தோத்ரம் செய்யும் ப்ரஸித்தியை கேட்டவன், சேஷ புதர்களின் இருள் நீக்குபவனாய், வீசுகின்ற கிரணங்களை உடைய ஆதித்யனுடைய மண்டலத்தின் ஊடே கொண்டு போய், பரமபதத்தில் நித்ய சூரிகளுடன் கூட வைத்து தானே உபாயம் என்ற குணத்தை நிரூபித்து மறுபடி மீளாததற்கும் கைங்கர்யத்திற்கும் உறுப்பாக தன்னுடைய பிரசாதத்தை இவர்களுக்கு கொடுத்து அடிமை கொள்ளும் அவன் அமர்ந்து வசிக்கின்ற ஊராவது அணி அரங்கம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

யமளார்ஜுநர்களை அழித்தது, குவலயாபீட என்ற யானையை கொன்றது, ப்ரலம்பாஸுர ப்ரளயம், கேசி என்ற அசுரனை ஸம்ஹாரம் செய்தது, சகடாஸுரனை முடித்தது, முஷ்டிக சாணுரர்களை அடித்து நொறுக்கியது, என்ற பல வரலாறுகளை சொல்கிறார். “உடையவிட்டு” என்ற சொல்லினால், கண்ணன் இவற்றை எளிதில் செய்து முடித்ததை சொல்கிறார்.

‘கறுப்பு’ என்னும் பொருளை தருவதாகிய ‘கருள்’ என்னுஞ்சொல் “கருப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்” என்றபடி சீற்றம் என்னும் பொருளைத் தரும்.

எம்பெருமான் தன்னை அணுகியவர்களை பரமபதத்தில் ஏற்றி, நித்ய கைங்கைரியம் பார்க்குமாறு சொல்வான். பரமபதத்துக்கு செல்வோர் ஸூர்ய மண்டலத்தைக் தாண்டி செல்வதால், “எறிகதிரோன் மண்டலத்தூடு” என்றார்.

ஏணி வாங்கி மேல் ஏறுகைக்கு எது சாதனமாயிருப்பதுவோ அது ஏணி எனப்படும்; அதாவது இங்கு எம்பெருமானே உபாயம். அது பரமபதம் ஏறும் வரையில் தான் பயன்; பிறகு இவன் தனக்கு உபேயம் என்பதால், “ஏணி வாங்கி” என்றார்.

இந்த பாட்டில் முன்னடிகளில் விரோதிகளை முடித்ததும், பின்னடிகளில் அவனே மோக்ஷம் அள்ளிப்பதையும் சொல்கிறது. அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை” (திருவாய்மொழி 10.9.11)ல் சொல்லியபடி ஆனந்த மயமான திருமாமணி மண்டபத்தில் நிரந்தர அதிசயமான ஆனந்தங்களை நித்யசூரிகளுடன் அனுபவிக்கும்படி வைத்து இருப்பார் என்கிறார் .

Leave a comment