திவ்ய பிரபந்தம்

Home

4.8.9 குன்றாடு கொழு முகில்

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல், * குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர், * குன்றாடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலையணவி, * மன்றூடு தென்றலுமாம் மதிளரங்கம் என்பதுவே.

பெரியாழ்வார் திருமொழி 4.8.9

தென்றல் காற்றானது மலைகளின் நடுவில் உள்ள பொழில்கள் இடையே நுழைந்து வஞ்சிக்கோடி போன்ற இடையை உடைய பெண்களின் நடுவே , கலவை சாந்து அணிந்த முலைகளை ஸ்பரித்து உலவுகின்ற தெருக்களில் மதில்களை உடைய அரங்கம் என்கிறார் . கழுத்து வரை நீரை பருகின மலையின் உச்சியில் மேகம் போன்ற குளிர்ச்சி உடையவனாய் , கரு நெய்தல் போன்ற பளபளப்பை உடையவனாய் , கோஷம் போடுகின்ற , கடல் போன்ற கம்பீரத்தை உடையவனாய் , களிப்பினால் ஆடும் மயில் கூட்டங்களை போன்ற அழகை உடையவனாய் , அடியவர்களுக்காக தன்னை முற்றும் கொடுக்கும், அடியவர்களின் மேல் பைத்தியமாக இருக்கும் எம்பெருமான் வசிக்கின்ற தேசம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து, * மன்னி இவ் வுலகை மனங்களிப்ப வந்து இயங்கும்,’ (பெரிய திருமடல், 2757) ல் சொல்லியபடி , தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள அழகிய சந்தன மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு, நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற போக்யமாய் அழகான இளந்தென்றல் காற்று என்கிறார் .

Leave a comment