திவ்ய பிரபந்தம்

Home

4.8.10 பருவரங்களவை பற்றி

பெரியாழ்வார் திருமொழி 4.8.10

பெரிய ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரங்களை பலமாக கொண்டு யுத்த விஷயமாக கர்வித்து கிளர்ந்த்டு வந்த இராவணனை யுத்தத்தில் அவன் அபிமானம் எல்லாம் அழியும்படி போர் செய்து அழித்துப்போட்ட வீர லக்ஷ்மியை உடையவனின் திருப்பதி விஷயமாக பெரிய ஆழ்வார் விவரித்து அருளி செய்த பாட்டு தோறும் ‘திருவரங்கம்’ என்ற திருநாமத்தை உடைய தமிழ் பாடல்கள் இந்த பத்தை கொண்டு மது கைடபர்களாகிற இருவருடைய சரீரத்தை எரித்த திருவனந்தாழ்வானின் மூச்சு காற்று வெப்பத்தால் கொளுத்திப் போட்டவனை துதிக்க வல்லவர்களுக்கு நாங்கள் சேஷ பூதர்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

‘காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள், ஏய்ந்த பணக்கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப, * வாய்ந்த மது கைடவரும் வயிறுருகி மாண்டார்‘ (மூன்றாம் திருவந்தாதி, 66) ல் சொல்லியபடி , சீறி இருளைப் போக்கி ஒளி விடுகின்ற சிறந்த ரத்தினங்கள் பொருந்தி இருக்கின்ற தன்னுடைய படங்களின் மேல் (திருவனந்தாழ்வானின்) ஒளிக்கு மேல் பெரு மூச்சு விட, கிட்டின மது கைடபர் குடல் அழுகி அழிந்து போனார்கள் .

தீதிலாத ஓண் தமிழ்களிவை ஆயிரத்துள் இப்பத்தும், ஓத வல்லபிராக்கள் நம்மை ஆளுமையார்கள் பண்டே” (திருவாய்மொழி 9.1.11) என்று தம் அருளிச் செயலைக் கற்பார்க்குத் தாம் அடிமை செய்வதாக அருளிச் செய்த நம்மாழ்வாரைப் போல, இவ்வாழ்வாரும் இப்பத்தையும் ‘கற்பார்க்கு’ அடிமை செய்யப் பெறுவோம் என்கிறார்.

Leave a comment